இயக்குநர் அட்லீ - ப்ரியா தம்பதி தங்கள் குழந்தையின் பெயரை முதன்முறையாக இணையத்தில் அறிவித்துள்ளனர்.


இயக்குனர் அட்லீ:


கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் பட்டறையில் தொடங்கி, இன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இயக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளவர் இயக்குநர் அட்லீ. இவரும் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமாகி தொலைக்காட்சி, சினிமா என பிரபலமாக வலம் வந்த ப்ரியாவும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 


காதல் பறவைகளாக வலம் வந்து சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்த இந்த ஜோடி, தொடர்ந்து வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழும் புகைப்படங்களைப் பதிவிட்டு லைக்ஸ் அள்ளி வந்தனர்.


மீர்:


இதனிடையே நடிகர் விஜய்யை தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களில் இயக்கி டாப் கமர்ஷியல் இயக்குநராக உருவெடுத்த அட்லீ, நடிகர் ஷாருக்கானை இயக்கும் அளவுக்கு வளர்ந்து பாலிவுட்டில் விரைவில் கால் பதிக்க உள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு ப்ரியா கருவுற்றிருக்கும் செய்தியை அட்லீ அறிவித்தார். தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் ப்ரியா - அட்லீ தம்பதி ஆண் குழந்தைக்கு பெற்றோராகினர்.


இந்நிலையில், சுமார் 4 மாதங்கள் கழித்து ப்ரியா - அட்லி தம்பதி தங்கள் குழந்தையின் பெயரை சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர். தங்கள் குழந்தைக்கு மீர் எனப் பெயரிட்டுள்ளதாக ப்ரியா முன்னதாக தன் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திரைத்துறையினரும், நெட்டிசன்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


ஜவான் விரைவில் ரிலீஸ்:


நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கி வரும் ஜவான் படம் செப்.7ஆம் தேதி வெளியாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்ட நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 


இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சஞ்சய் தத், தீபிகா படுகோன், யோகி பாபு,  பிரியா மணி, சுனில் குரோவர் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


முன்னதாக askSrk ஹேஷ்டேகில் தன் ரசிகர்களுடன் ஷாருக்கான் கலகலப்பாக பேசிய நிலையில், இயக்குநர் அட்லீ பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். 


அட்லீ தன்னை தமிழ் பாடல் வரிகளுக்கு வாயசைக்க வைத்ததாகவும் அட்லீ இயக்கி விஜய் நடித்த  தெறி, மெர்சல் ஆகிய  படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் ஷாருக்கான் தெரிவித்திருந்தார்.


அனிருத் பாலிவுட்டில் முதன்முறையாக எண்ட்ரி கொடுத்து இந்தப் படத்துக்கு  இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Ilayaraja Controversy Tweet: மனோபாலாவை கொச்சைப்படுத்தி தற்பெருமை பேசுவதா? - இளையராஜாவிடம் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்