Jawan: ஜவான் படத்தில் இணையும் அல்லு அர்ஜூன்..? செம்ம மாஸ் அப்டேட்டா இருக்கே..!

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்க டோலிவுட் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனை அட்லீ அணுகியதாக கூறப்படுகிறது

Continues below advertisement

பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடிப்பில் ஸ்பை திரில்லர் திரைப்படமாக சமீபத்தில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பி வரும் திரைப்படம் 'பதான்'. ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிய இப்படம் பாய் காட் செய்யும் அளவிற்கு முற்றுகையிடப்பட்டாலும் அவை அனைத்தையும் துவம்சம் செய்து ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Continues below advertisement

 

குஷியில் ஷாருக்கான் :

பதான் படத்தின் வெற்றியில் மிதந்து கொண்டு இருக்கும் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கி வரும் 'ஜவான்' படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தின் அட்டகாசமான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. 

 


லேட்டஸ்ட் தகவல் :

பதான் படத்தின் அமோகமான வரவேற்பை அடுத்து ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. மிகவும் மும்மரமாக நடைபெற்று வரும் இப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ அப்பியரன்ஸ் கொடுக்க உள்ளார் என ஏற்கனவே பரவி வந்த தகவலை தொடர்ந்து தற்போது டோலிவுட் முன்னணி நடிகரான புஷ்பா கிங் அல்லு அர்ஜுன் 'ஜவான்' படத்தில் இணையவுள்ளார் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

 

அட்லீ அல்லு அர்ஜுன் சந்திப்பு :

புஷ்பா படத்தின் முதல் பாகம் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்றதை தொடர்ந்து பான் இந்திய நடிகர் என்று அந்தஸ்திற்கு உயர்ந்துள்ள அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக ஈடுபட்டுள்ளார்.  அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து ஜவான் படம் குறித்து இயக்குனர் அட்லீ பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை. விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு இணையாக அல்லு அர்ஜுன் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இது தான் சோசியல் மீடியாவில் தற்போது ட்ரெண்டிங்காக பரவி வருகிறது. இது அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்படி அல்லு அர்ஜுன் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டால் இந்து நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola