மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் பிரிமீயர் லீக் 2023 ஏலம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 490 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதில், 246 இந்திய வீராங்கனைகளும், 163 வெளிநாட்டு வீராங்கனைகளும் உள்ளனர். 

இந்தநிலையில், இந்த ஏலத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அடிப்படை விலை ரூபாய் 50 லட்சத்திற்கு நிர்ணயித்துடன் களமிறங்கினர். இவரையும் வாங்க அனைத்து அணிகளும் கடுமையாக போட்டியிட்டது. ஒரு கட்டத்தில் முந்திகொண்ட மும்பை அணி ரூ.1.8 கோடிக்கு ஏலம் எடுத்தது. 

இந்திய ஆண்கள் அணி கேப்டன் ரோகித் சர்மாவும், பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருப்பது ஐபிஎல்-லில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு 33 வயது என்றாலும், டி20 போட்டிகளில் அவரது அதிரடி சரவெடியாகவே இருக்கும். இவர் டி20யை பொறுத்தவரை ஒரு சதம் உள்பட 3000 ரன்களை எடுத்துள்ளார். 

அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை அட்டவணையாக இங்கே காணலாம். 

WPL ஏலம் 2023 வீரர்கள் பட்டியல் ஏல விலை ஏலம் எடுத்த அணி
ஸ்மிருதி மந்தனா ரூ 3.4 கோடி ஆர்சிபி
நாட் ஸ்கிவர் ரூ 3.2 கோடி UP வாரியர்ஸ்
ஆஷ்லே கார்டனர் ரூ 3.2 கோடி குஜராத் ஜெயண்ட்ஸ்
ரேணுகா சிங் ரூ 1.5 கோடி ஆர்சிபி
தீப்தி சர்மா ரூ 2.6 கோடி UP வாரியர்ஸ்
ஹர்மன்ப்ரீத் கவுர் ரூ 1.6 கோடி மும்பை இந்தியன்ஸ்
சோஃபி டெவின் ரூ 50 லட்சம் ஆர்சிபி
எல்லிஸ் பெர்ரி ரூ 1.7 கோடி ஆர்சிபி
சோஃபி எக்லெஸ்டோன் ரூ 1.8 கோடி UP வாரியர்ஸ்
பெத் மூனி ரூ 2 கோடி குஜராத் ஜெயண்ட்ஸ்
தாலியா மெக்ராத் ரூ 1.4 கோடி மும்பை இந்தியன்ஸ்
ஷப்னிம் இஸ்மாயில் ரூ 1 கோடி UP வாரியர்ஸ்
அமெலியா கெர் ரூ 1 கோடி மும்பை இந்தியன்ஸ்
ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரூ 2.2 கோடி டெல்லி தலைநகரங்கள்
ஷஃபாலி வர்மா ரூ 2.0 கோடி டெல்லி தலைநகரங்கள்
சோபியா டங்க்லி ரூ.60 லட்சம் குஜராத் ஜெயண்ட்ஸ்
மெக் லானிங் ரூ 50 லட்சம் டெல்லி தலைநகரங்கள்
பூஜா வஸ்த்ரகா ரூ 1.9 கோடி மும்பை இந்தியன்ஸ்
அன்னாபெல் சதர்லேண்ட் ரூ 70 லட்சம் குஜராத் ஜெயண்ட்ஸ்
டீன்ட்ரா டாட்டின் ரூ 60 லட்சம் குஜராத் ஜெயண்ட்ஸ்
ஹர்லீன் தியோல் ரூ.40 லட்சம் குஜராத் ஜெயண்ட்ஸ்
ரிச்சா கோஷ் ரூ 1.9 கோடி ஆர்சிபி
யாஸ்திகா பாட்டியா ரூ 1.5 கோடி மும்பை இந்தியன்ஸ்
அலிசா ஹீலி ரூ 70 லட்சம் UP வாரியர்ஸ்