Atlee Wedding Anniversary: 9வது திருமண நாள் - ஒரே வார்த்தையில் நடந்த அட்லீ-பிரியா திருமணம் - பின்னணி தெரியுமா?

இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா தம்பதியினர் இன்று தனது 9 ஆவது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடுகிறார்கள்

Continues below advertisement

அட்லீ

Continues below advertisement

ராஜா ராணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் அட்லீ. தொடர்ந்து விஜயை வைத்து தெறி , மெர்சல், பிகில் உள்ளிட்ட ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவராக இடம்பிடித்தார். தமிழ் சினிமாவைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. உலகளவில் 1000 கோடிகளுக்கும் மேலாக இந்தப் படம் வசூல் செய்தது. 

அட்லீ பிரியா ஜோடி

அட்லீ மற்றும் பிரியாவின் காதல் கதை தமிழ் சினிமாவில் வரும் ஒரு காதல் காட்சியைப் போன்றது தான். ஒரு பக்கம் உதவி இயக்குநராக இருந்த அட்லீயும் மறுபக்கம் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த பிரியாவும் தங்களது  பொதுவான நண்பர்கள் வழியாக முதல் முறையாக சந்தித்துக் கொண்டார்கள். காலப் போக்கில் அட்லீ மற்றும் பிரியா நெருங்கிய நண்பர்களாக ஆகிவிட்டார்கள். இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்வார்களாம். தன்னுடைய முதல் படமான ராஜா ராணி படத்தை  அட்லீ இயக்கும்போது அவருக்கும் பக்கபலமாக நின்று பல ஆதரவு கொடுத்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் பிரியாதான்.

ரெஸ்டாரெண்டில் ப்ரோபோசல்

ராஜா ராணி  படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் தன்னுடைய வருகை அட்லீ அறிவித்திருந்தார். அப்போது அட்லீயும் பிரியாவும் வைத்து சந்தித்துக் கொண்டபோது தனது வீட்டில் தனக்கு மாப்பிள்ளைப் பார்த்துக் கொண்டிருப்பதாக பிரியா தெரிவித்திருக்கிறார். தனக்கு வரிசையாக திருமணத்திற்கு ஜாதகங்கள் வந்துக் கொண்டிருந்ததாக கூறிய பிரியவிடம் சிறிதும் யோசிக்காமல் “பேசாம் என்னோட ஜாதகத்த வேணா உங்க அப்பா அம்மாகிட்ட கொடு” என்று சொல்லியிருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத பிரியா மெளனமாக வீட்டிற்கு சென்றுள்ளார்.  வீட்டிற்கு சென்றதும் அட்லீக்கு கால் செய்து ஏன் அப்படி சொன்னாய் என்று கேட்டிருக்கிறார். தனக்கு மனதில் பட்டதை தான் சொன்னதாகவும் விருப்பமிருந்தால் பிரியாவின் பெற்றோரிடம் தான் வந்து பேசுவதாகவும் கூறியுள்ளார். அவ்வளவுதான் தொடங்கிவிட்டது அட்லீ பிரியாவின் திருமணப் பயணம்.

முதல் குழந்தை

ஜவான் படத்தின் படப்பிடிப்பில் இருந்த அட்லீ தன்னுடைய மனைவி பிரியா கருவுற்றிருந்த செய்தி கேட்டு அதை ஷாருக் கானிடம் பகிர்ந்து கொண்டார். படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஷாருக் கான் அட்லீயை தன்னுடைய மனைவியுடன் இருக்க வலியுறுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து பிரியா அட்லீக்கு தைரியம் சொல்லி அவரை படப்பிடிப்பைத் தொடர சொல்லி இருக்கிறார். கடந்த  ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தங்களது முதல் ஆண் குழந்தையை வரவேற்றனர் அட்லீ பிரியா தம்பதியினர். இந்த குழந்தைக்கும் மீர் என்று பெயர் வைத்துள்ளார்கள். 

9 ஆவது திருமண நாள்

இன்று தங்களுடைய 9 ஆவது ஆண்டு திருமண  நாளைக் கொண்டாடுகிறார்கள் அட்லீ மற்றும் பிரியா. இதனை முன்னிட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அட்லீயுடனான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தங்கள் இருவருக்குமான வாழ்த்தை பகிர்ந்துள்ளார் பிரியா அட்லீ. இந்த பதிவில் அட்லீயை பிரியா க்யூட்டாக பப்பி என்று அழைத்துள்ளார்.

ALSO READ | Japan Movie Review: கார்த்திக்கு கை கொடுத்ததா தீபாவளி ரேஸ்? ’ஜப்பான்’ போலாமா வேணாமா? முழு விமர்சனம் இதோ!

Continues below advertisement