”கொரோனா ரெண்டாம் அலை அடிச்சிட்டு இருக்கு. இதனால நிறையப் பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க. முக்கியமா நாடக கலைஞர்கள் அதிகமா பாதிக்கப்பட்டு இருக்காங்க. சம்மர் டைம்ல இவங்களுக்கு வருமானமே இருக்கும். ஆனா, இப்போ எந்த வருமானமும் இல்லமா வீட்டுல முடங்கி போயிருக்காங்க. இவங்க நிலையை நினைக்குறப்போ எனக்கு வருத்தமா இருக்கு..” என்று தொடங்கினார் முத்து
நிறையப் பேர் யூ டியூப் சேனல் ஆரம்பிச்சது பத்தி கேட்டுட்டு இருக்காங்க. இப்போ இருக்குற சூழல்ல யூ டியூப் ரொம்ப முக்கியம்னு நினைக்குறேன். என்னோட ப்ரெண்ட்ஸ் பாலா மற்றும் ஈரோடு மகேஷ் ரெண்டு பேரையும் சேனல் ஆரம்பிக்க சொல்லிட்டு இருக்கேன். கேட்க மாட்டுறாங்க. புகழும், நானும் ஒரு மணிநேரம் வரைக்கும் தினமும் பேசுவோம். எங்களுக்குனு இருக்குற டீம்கூட அரட்டை அடிப்போம். நான் சொல்லிதான் புகழ் யூ டியூப் சேனல் ஸ்டார்ட் பண்ணுனான். நல்ல போயிக்கிட்டு இருக்குண்ணான்னு சொன்னான்.
அதிகமான சினிமாவுல நடிக்கமா போனதுக்கு காரணம் என்ன?
''சினிமால எனக்கு பெரிய வாய்ப்புகளெல்லாம் வந்தது. வெற்றிமாறன் சார் 'ஆடுகளம்' படம் எடுத்தப்போ மதுரைக்கு வந்திருந்தார். அப்போ ஸ்க்ரிப்ட் பேப்பர் கையில கொடுத்து வொர்க் பண்ண சொன்னார். ஆனா, எனக்கு அப்போ நிறைய ஃபாரின் ஈவன்ட்ஸ் வந்துட்டு இருந்தது. இதனால, என்னால நடிக்க முடியாம போயிருச்சு. தவிர, 'நண்பன்' படத்துலயும் நடிக்க கூப்பிட்டாங்க. ஆனா, என்னோட சில கமிட்மென்ட்ஸ் காரணமா நடிக்கல. டி.ஆர் சாரோட ஒரு படத்துல முக்கியமான ரோல்ல நடிச்சிருந்தேன். ஆனா, இந்தப் படம் ரிலீஸாகமா போயிருச்சு. இப்போ சில படங்கள்ல கமிட்டாகியிருக்கேன். படம் ரிலீஸூக்கு பிறகு இன்னும் நல்ல பேசப்படுவேன்னு நினைக்குறேன்.
மதுரை முத்துனு பேர் வெச்சதுக்கு பின்னாடி என்ன காரணம் இருக்கு?
என்னோட ஒரிஜினல் பேர் ரொம்ப பெருசு. மேடையில பேசும் போது பெரிய பேரை சொல்லி கூப்பிட முடியாது. அப்போ என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சேன். அந்த நேரத்துல வடிவேல் சார் மதுரைக்கு வந்திருந்தார். என்னோட நிகழ்ச்சியெல்லாம் பார்த்துட்டு ஊக்கமா பேசுவார். இவர்தான், ”மதுரை லாங்குவேஜ் பெரிய பலமா இருக்குடா”ன்னு சொன்னார். இதனால, ஊர் பேரையும் சேர்த்து மதுரை முத்துன்னு வெச்சிட்டேன்.
''பாலியல் தொல்லைகள் கல்வி நிறுவனங்களில் கூட நடக்கிறது பற்றி என்ன நினைக்கிறீங்க?
''இது ரொம்ப வேதனையான விஷயம். ஏன்னா, ஸ்கூல்ல பசங்க படிக்க போறாங்க. சொல்லி தர்ற இடத்துல இருக்கக்கூடிய ஆசிரியர் எந்த குற்றமும் செய்யாதவரா இருக்கணும். இவரே தப்பு பண்ணுனா எப்படி. ராஜகோபாலன் பண்ணுனது பெரிய தப்பு. இவருக்கு கொடுக்குற தண்டனையை பார்த்துட்டு தப்பு பண்ண நினைக்கிற ஆசிரியர்கள் பயப்படணும். சவுதி அரேபியாவில் கொடுக்குற மாதிரி கடுமையான தண்டனையை இவங்களுக்கு கொடுக்கணும்.