நடிகர் விஜய் நடிக்கும்  வாரிசு படத்தின் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என  தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. விஜய்யின் 66வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. குடும்ப கதையாகி உருவாகி வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார். 


இதற்கிடையில் தயாரிப்பு செலவுகள் மற்றும் நடிகர்களின் சம்பளம் அதிகரித்து வரும் நிலையில் சமீபகாலமாக அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் தெலுங்கு படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த பிரச்சனையை தீர்க்க அனைத்து படங்களின் படப்பிடிப்பையும் நிறுத்த தெலுங்கு  திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரைப்படங்களின் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 






ஆனால் அங்கு விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு மட்டும் தடையில்லாமல் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவை தில் ராஜூ படத்தை எடுத்து வருவதற்கு மற்ற தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு விளக்கமளித்த தில் ராஜூ, இருமொழிகளில் வெளியாகும் வாரிசு படம் நேரடி தமிழ் படம் தான் என்றும், முதலில் தமிழில் எடுக்கப்பட்டு  பின்னர் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வாரசுடு என்று பெயர் மாற்றப்படும் என தெரிவித்திருந்தார். 


இதனை விமர்சித்துள்ள தயாரிப்பாளர்கள், வாரிசு நேரடி தமிழ் படம் அல்ல என்றும், இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது என்றும் கூறியுள்ளனர். எனவே தெலுங்கு திரைப்பட வேலைநிறுத்தம் இதற்கும் பொருந்தும் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வாரிசு படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்து படம் குறித்த நேரத்தில் ரிலீசாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண