தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குவது சென்னை பல்கலைகழகம். சென்னை பல்கலைகழகத்தின் துறைகளில் மிகவும் முக்கியமானதாக விளங்குவது இதழியல் மற்றும் ஊடகவியல் துறை. இந்த நிலையில், ஊடகவியல் துறை சார்பாக மாணவர்களுக்கான குறும்பட போட்டி நடத்தப்பட உள்ளது.


இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,   இந்த குறும்பட போட்டியை சென்னை பல்கலைகழகம் நடத்துகிறது. “நள்ளிரவில் சுதந்திர விடியல்” என்ற மையக் கருத்துடன் குறும்படங்கள் இடம்பெறவேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த குறும்பட போட்டியில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.





இதில் இடம்பெறும் குறும்படங்கள் 2 அல்லது 3 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது குறும்படங்களை அனுப்ப கடைசி நாள் வரும் 12-ஆம் தேதி ஆகும். தகுதியான படங்கள் மட்டும் சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பப்படும். போட்டியில் இடம்பெறும் திரைப்படங்களை திரைத்துறையில் இடம்பெற்றுள்ள வல்லுனர்கள் குழு நேரில் பார்வையிடும்.


மேலும் படிக்க : College Admission: கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட்.5 முதல் கலந்தாய்வு- கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு


அவர்களின் முடிவுகளின்படி முதலிடத்தை பிடிக்கும் குறும்படத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் பரிசாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்படும். மூன்றாம் பரிசாக ரூபாய் 2,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://forms.gle/84NNjMe9FPuhrr9A என்ற இணையத்தில் பதிவு செய்யலாம்.  




சென்னை பல்கலைகழகத்தின் ஊடகவியல் துறையின் இந்த முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பல்கலைகழகத்தின் இதழியல் துறையை நேரிலும் தொடர்பு கொண்டு விவரம் தெரிந்து கொள்ளலாம். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது குறும்படங்களை https://forms.gle/9HDNXPqHjCVgNawuS என்ற இணையம் மூலம் குறும்படங்களை பதிவேற்றம் செய்யலாம். இந்த போட்டியில் மாணவர்கள் தவிர வேறு யாரும் பங்கேற்க அனுமதி கிடையாது என்பது நினைவுகூரத்தக்கது.


மேலும் படிக்க : Group 4 Answer Key: குரூப் 4 தேர்வு Answer Key மீது ஆட்சேபனை தெரிவிக்கலாம்; ஆனால்.. இது முக்கியம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


மேலும் படிக்க : Annual Counselling: கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாற்றக் கலந்தாய்வு- அன்புமணி வலியுறுத்தல்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண