விடாமுயற்சி:


அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 'விடாமுயற்சி' படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தான் அஜித் பற்றி இயக்குநர் விக்னேஷ் சிவன் வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டிய பழைய சம்பவத்தை நோட் பண்ணி நோஸ் கட் செய்துள்ளனர் நெட்டிசன்கள். இது உண்மையா? பொய்யா என்பது பற்றி அஜித் மட்டும் விளக்கம் கொடுக்க முடியும்.


சிம்புவை வைத்து இயக்கிய, 'போடா போடி' படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு 'நானும் ரௌடி' தான், 'தானா சேர்ந்த கூட்டம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களை இயக்கினார். இப்போது, லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கி வருகிறார்.


சிக்கிய விக்கி:


இந்த நிலையில் தான் என்னை அறிந்தால் படத்திற்கு நான் ஒரு பாடல் எழுதி இருந்தேன். அப்போது அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரிடம் பேசினேன். அஜித், நான் நிறைய படங்கள் பார்க்கமாட்டேன். ஆனால் நானும் ரௌடி தான் படத்தை பல முறை பார்த்தேன். அதில் பார்த்திபன் கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பிடிச்சது. அப்படியொரு கதை ரெடி பண்ணுங்கள். நாம் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று கூறியதாக விக்னேஷ் சிவன் சொன்னார்.




இதில், என்ன அதிர்ச்சியான விஷயம் என்றால், கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அருண் விஜய், அனுஷ்கா ஷெட்டி, பார்வதி நாயர் ஆகியோர் பலர் நடிப்பில் 2015 பிப்ரவரி 5ஆம் தேதி வெளியான படம் தான் என்னை அறிந்தால். இந்தப் படம் வெளியான போது விக்னேஷ் சிவனின் நானும் ரௌடி தான் படம் வெளியாகவில்லை.


நானும் ரௌடி தான் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியானது. அப்படியிருக்கும் போது எப்படி அஜித் நானும் ரௌடி தான் படத்தை பார்த்திருக்க முடியும். ஆனால், அஜித் பல முறை அந்த படத்தை பார்த்ததாகவும், ரொம்ப நல்லாயிருந்ததாகவும் கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார். இதை தான் இப்போ நோட் பண்ணி கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். சிலர் நயன் புருஷன் பொய் சொல்கிறாரா? என்று கூட கேள்வி எழுப்பி வருகின்றனர்.