தனது அப்பாவின் சொத்தை படம் எடுத்து தான் அழிக்கவில்லை என்று மறைந்த சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.

Continues below advertisement

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என உள்ளிட்ட பல்வேறு மொழிகளி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர், கடந்தாண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரின் இழப்பு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தன. அவர் இறந்து ஒரு வருடங்கள் ஆக இருக்கிறது. இந்த நிலையில், தனது அப்பாவின் சொத்தை படம் எடுத்து தான் அழிக்கவில்லை என்று மறைந்த சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார். சினிமா பாடல்களை பாடியுள்ள அவர், சில படங்களில் நடித்தும் உள்ளார். படங்களையும் தயாரித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திம் மகன் எஸ்.பி.பி.சரண், அவரின் அப்பா அளவிற்கு பாடி புகழ்பெறவில்லை என்றும், திரைப்படங்கள் எடுப்பதாக கூறி எஸ்பிபியின் சொத்துகளை அழித்துவிட்டதாகவும், இதனால், எஸ்பிபி மனவருத்தத்துடன் இருந்ததாகவும் கோலிவுட்டில் பேசப்பட்டது. தற்போது அது அனைத்திற்கும் எஸ்பிபி சரண் விளக்கமளித்துள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் தயாரித்த முதல் படமான ‘உன்னை சரணடைந்தேன்’ படத்திற்கு மாநில அரசு விருது கிடைத்தது. ஆனால், லாபம் வரவில்லை. சமுத்திரக்கனி கூறிய கதைபிடித்துப் போனதால் இந்தப் படத்தை தயாரித்தேன். அதன் பிறகு, தெலுங்கில் மாபெரும் வெற்றிப் படமான வர்ஷம் திரைப்படத்தை தமிழில் மழை என்ற பெயரில் அதிக பணம் செலவழித்து தயாரித்தேன். இந்தப் படத்தால் மொத்த பணமும் போய்விட்டது. நஷ்டம் என்பது சாதாரணமானது, வருத்தப்படாதே என்று அப்போது அப்பா கூறினார்.

சென்னை 600028 படம் வெற்றி படமாக அமைந்தாலும், எதிர்பார்த்த பணவரவில்லை. இதனைத் தொடர்ந்து, தயாரித்த ஆரண்ய காண்டம் படம் தேசிய விருதுகள் எல்லாம் பெற்றது. இதனால், பெயர் புகழ் வந்தது. ஆனால் பணம் வரவில்லை. இதன்காரணமாக மன அழுத்தத்தில் இருந்தேன்” என்றார்.

அப்பா ஆசையாக கட்டிய கோதண்டபாணி ஸ்டூடியோவிலும் பணிகள் எதுவும் நடக்கவில்லை என்றும், இதை பார்த்தவர்கள் பாலசுப்பிரமணியம் பாட்டு பாடி சம்பாத்தித்த பணத்தை எல்லாம் அவரின் மகன் அழித்துவிட்டான் என்றும், இனிமேல் பாலசுப்பிரமணியம் அவ்வளவுதான் எனவும் விமர்சித்து பேசியது கேட்டு, தனது மனசு மிகவும் கஷ்டப்பட்டதாகவும், அப்போது அப்பா, அம்மா தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் எஸ்.பி.பி.சரண் வருத்தத்துடன் கூறினார்.

அப்போது மேடை கச்சேரிகள்தான் பொருளாதார ரீதியாக தங்களுக்கு உதவியாக இருந்ததாக கூறிய சரண், இனிமேல் பாட முயற்சி செய்யலாமா என யோசித்தபோது கொடிய வைரஸான கொரோனா தொற்றால் அப்பாவை இழந்து வாழ்க்கை மீண்டும் சீர்குலைத்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தனது தந்தை குரலில் பாட முடிவு செய்து இருப்பதாகவும் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.

Vijay Sethupathi | ’கொஞ்சமாவது நன்றியோட இருங்க விஜய் சேதுபதி'! - நாம் தமிழர் பிரமுகர் கண்டனம்..!