Just In





உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
விஜய் படத்தை முடித்துவிட்டு கலகத் தலைவன் படத்தை முடித்து தருவதாக மகிழ் திருமேணி கூறியும் உதயநிதி ஸ்டாலின் கன்வின்ஸ் ஆகவில்லை

மகிழ் திருமேணி
அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மகிழ் திருமேணி. இப்படம் அருண் விஜயின் கரியரில் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தபாடியாக ஆர்யாவுடன் மீகாமன் படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றாலும் கம்ர்சியல் வெற்றிபெறவில்லை.
தொடர்ந்து தடம் , உதயநிதி நடித்த கலகத் தலைவன் ஆகிய படங்கள் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றன. மகிழ் திருமேணியின் படங்களில் த்ரில்லர் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது.
விடாமுயற்சி
தற்போது அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேணி இயக்கியுள்ளார். த்ரிஷா , ஆரவ் , அர்ஜூன் , ரெஜினா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 10 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீச் ஒத்திவைக்கப்பட்டது. வரும் ஜனவரி 23 ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உதயநிதியால் பறிபோன விஜய் பட வாய்ப்பு
இயக்குநர் மகிழ் திருமேணி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் விஜயிடம் தான் மூன்று கதைகள் சொன்னதாகவும் அதில் ஒரு கதையை விஜய் ஓக்கே செய்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் அப்போது தான் உதயநிதியின் கலகத் தலைவன் படத்தை இயக்க இருந்ததாகவும் , விஜய் படத்தை முடித்து கலகத் தலைவன் படத்தை முடித்து தருவதாக தான் சொல்லியும் உதயநிதி கன்வின்ஸ் ஆகவில்லை என தெரிவித்துள்ளார். தற்போது விஜய்க்காக மூன்று கதைகள் காத்திருக்கின்றன இதற்கு விஜய்தான் பதில் சொல்ல வேண்டும் என மகிழ் திருமேணி நேர்காணலில் கூறியுள்ளார்.