Dhurv Vikram On Aditya Karikalan: ‛இந்த கள்ளும் பாட்டும்.. இரத்தமும்.. போர்களமும்..’ அப்பா டயலாக் பேசிய துருவ்!

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பேசிய இந்த கள்ளும், பாட்டும்.. இரத்தமும்.. வசனத்தை அவரது மகனான துருவ்விக்ரம் பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

 ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம் பேசிய இந்த கள்ளும், பாட்டும்.. இரத்தமும்.. வசனத்தை அவரது மகனான துருவ்விக்ரம் பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement


கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்தப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. 

 

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம், பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் மத்தியிலும், படிக்காதவர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆதித்ய கரிகாலனாக ஆக்ரோஷத்தின் உச்சமாக விக்ரம் நடிக்க, குறும்பு கார வந்தியத்தேவனாக கார்த்தியும், நேர்மைமிகு அரசனாக ஜெயம் ரவி நடித்திருந்தனர். அதே போல நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்து அசத்தி இருந்தனர். இந்தக்காலத்திற்கு ஏற்றவாறு வசனங்களை கொடுத்திருந்த ஜெயமோகனின் வேலையையும் கவனிக்கப்பட்டது. 

 

இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்  படத்தில் ஆதித்ய கரிகாலனாக விகரம் பேசிய , “இந்த கள்ளும்,  பாட்டும்.. இரத்தமும்.. போர்களமும்..  எல்லாமே அதை மறக்கத்தான்.  அவளை மறக்கத்தான். என்னை மறக்கத்தான்...” என்ற வசனம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பலரும் இந்த வசனத்தை ரீல்களாக பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விக்ரம் மகனான துருவ் விக்ரம் அதே வசனத்தை மேடையில் பேசினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப்படம் உலகம் முழுக்க 400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.  

பலர் இந்தப்படத்தை பாகுபலியுடம் ஒப்பிட்டு பேசிய நிலையில், பொன்னியின் செல்வன்’ பாகுபலி படம் போல ஏன் இல்லை என்பது குறித்து இயக்குநர் மணிரத்னம் பேசியதுதாவது:- 

இது குறித்து மணிரத்னம் பேசும் போது, “ ராஜராஜ சோழன் தமிழ்நாட்டில் மிகச்சிறந்த அரசராக இருந்தவர். அவர் பற்றி எடுக்கும் போது நேர்மையாக, உண்மையாக இருக்க வேண்டும். அதே போல அதனுடன் பயணிக்கும் கேரக்டர்களும் உண்மையாக இருக்க வேண்டும். இந்தக்கதை வந்தியத்தேவன் வழியாக வரும். அவன் கண்வழியாகத்தான் நாம் கதையை பார்க்கிறோம்.

அதனால் இது ஒரு யதார்த்தமான படைப்பு. அதனால் இதில் பாகுபலி போல அதித கற்பனை சார்ந்த காட்சிகள் இருக்காது. சூப்பர் ஹீரோக்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் இதில் எல்லாமே ரியலிஸ்ட்டிக்கா இருக்கும். பாடல்கள், இடங்கள் எல்லாமே அப்படித்தான் இருக்கும். அதனால் பாகுபலி, பொன்னியின் செல்வன் ஆகிய இருபடங்களும் வெவ்வேறு ஜானர்கள் கொண்டவை.” என்று பேசியிருந்தார்.  

Continues below advertisement
Sponsored Links by Taboola