விக்ரம் மகனான துருவ் விக்ரம் பாலா இயக்கிய  ‘வர்மா’ படத்தில் நடித்தார். ஆனால் அந்தப்படம் கைவிடப்பட்டு,  வேறொரு இயக்குநரை வைத்து ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், துருவின் நடிப்பு பெரும்பான்மையானோரால் பாராட்டப்பட்டது. 


 






அதனைத்தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான  ‘மகான்’ படத்தில் தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப்படத்திலும் துருவின் நடிப்பு பாராட்டப்பட்டது. இந்த நிலையில் துருவ் விக்ரம் இண்டிபெண்டெண்ட் மியூசிக் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 


 


                                                             


அந்த  வீடியோவில், எனக்கு சின்ன வயதில் நடிகர் ஆக வேண்டும், ஃபிலிம் மேக்கர் ஆக வேண்டும் ராக்ஸ்டார் ஆக வேண்டும் என பல கனவுகள் இருந்தன. ஆனால்அந்த கனவுக்குள் இறங்க எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அதனால் அது கற்பனையாகவே இருந்தது.


எனது அம்மா என்னை எல்லா வகுப்புகளிலும் சேர்த்து விடுவார். ஆனால் எதிலும் எனக்கு பெரிதாக ஆர்வம் வரவில்லை. தனியாக இருக்கும் போது சினிமா சார்ந்தே யோசித்துக்கொண்டிருப்பேன். நானும் ஒரு நடிகனாக மாறி அப்பாவின் மரபை தொடர வேண்டுமென நினைக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு பயம் பிறக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் நான் நடிகன் என்பதை நானே நம்பினேன்.  என்னுடைய வாழ்கையில் ரஹ்மான், சனா, அனி, யுவன், ஜிவி ஆகியோரது பாடல்கள் தான் எனது நினைவுகளாக இருக்கின்றன. அப்படிப்பட்ட நினைவுகளை எனது பாடல்கள் வழியாக உங்களை இந்த யூடியூப் சேனலில் சந்திக்கிறேன்” என்று பேசியிருக்கிறார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண