துருவ் விக்ரம் எழுதி, பாடி, இயக்கியுள்ள இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பத்தின் ப்ரோமோ வெளியானது. 'மனசே' என்னும் இந்த மியூசிக் ஆல்பத்திற்கு உஜ்வால் குப்தா இசையமைத்துள்ளார். இதன் முதல் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகி உள்ளது. முழுமையான பாடல் செப்டம்பர் 22 ஆம் நாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






விக்ரம் மகனான துருவ் விக்ரம் பாலா இயக்கிய  ‘வர்மா’ படத்தில் நடித்தார். ஆனால் அந்தப்படம் கைவிடப்பட்டு,  வேறொரு இயக்குநரை வைத்து ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், துருவின் நடிப்பு பெரும்பான்மையானோரால் பாராட்டப்பட்டது. சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த மகான் திரைப்படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்தனர். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப்படத்திலும் துருவின் நடிப்பு பாராட்டப்பட்டது.


 



ஒரு வாரத்திற்கு முன் மனசே ஆல்பத்தின் ப்ரோமோ விரைவில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் இன்று முதல்  ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. 


 






மேலும் முழு பாடல் செப்டம்பர் 22 ஆம் நாள் வெளியாகும் என அந்த ப்ரோமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது