இங்கிலாந்து மகாராணி எலிசபெத் முன்னதாக உயிரிழந்த நிலையில், அவர் உபயோகித்த டீ பேக் 12ஆயிரம் டாலருக்கு ஏலம் சென்றுள்ளது.
இங்கிலாந்து ராணி எலிசபெத் உலகின் நீண்ட காலம் ராணியாக ஆட்சி செய்த பெருமைக்குரிய இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இந்நிலையில் அவரது 70 ஆண்டுகால ஆட்சியை நினைவுகூறும் வகையில் அவர் உபயோகித்த பொருள்கள் முன்னதாக ஆன்லைனில் விற்பனைக்கு வந்தன.
அதில் ராணி எலிசபெத் பயன்படுத்திய டீ பேக் விற்பனைக்கு வந்தது. 1998ஆம் ஆண்டு அவர் உபயோகப்படுத்திய இந்த டீ பேக், 12 ஆயிரம் டாலர்களுக்கு ‘ஈ பே’ தளத்தில் விற்பனைக்கு வந்தது.
வின்சர் அரண்மனையில் அவர் உபயோகித்து வந்த இந்த டீ பேக், தற்போது ஈ பே தளத்தில் 9.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் நேற்று முன் தினம் (செப்.09) இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார்.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி உடல்நலப் பிரச்சினைகளால் தளர்ச்சியடைந்தார். மேலும் அவர் நடக்கவும் நிற்கவும் சிரமப்பட்டு வந்த நிலையில் தன் 96ஆம் வயதில் உயிரிழந்தார்.
கடந்த 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஜார்ஜ் 6 ஆம் மன்னருக்கு பிறந்த எலிசபெத் மகாராணி தன் தந்தை இறப்புக்குப் பிறகு 1953ஆம் ஆண்டு ராணியாக முடிசூடிக் கொண்டார்.
மொத்தம் 70 ஆண்டுகள் பதவி வகித்துள்ள எலிசெபத் மகாராணி, வின்ஸ்டன் சர்ச்சில், மார்கரேட் தட்சர் தொடங்கி லிஸ் டிரஸ் வரை 15 பிரதமர்களை நியமித்துள்ளார்.