சின்னத்திரை மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்ததன்  மூலம் பிரபலமானார். அதே நேரத்தில் ஏராளமான சர்ச்சையில் சிக்கினார். அது அனைத்திற்கும் பதிலளிக்குமாறு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார் தர்ஷா குப்தா.


சன்னி லியோனுடன் தர்ஷாகுப்தா:


செல்வராகவன் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ருத்ர தாண்டவம்' திரைப்படத்தில் நடித்து வரும் இவர் நடிகர் சதீஷ், நடிகை சன்னி லியோன் ஆகியோர் நடிப்பில் உருவான 'ஓ மை கோஸ்ட்' திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் தான் வெளியானது. அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தர்ஷாவின் ஆடை குறித்து நடிகர் சதிஷ் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தர்ஷா குப்தாவின் பெயர் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவியது. இவருக்கும் நடிகர் சதீஷுக்கும் இடையில்  பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு சுமுகமாக முடிந்தது. 


 



நடிப்பது எளிதல்ல:


அந்த வகையில் கவர்ச்சியில் தூள் கிளப்பி வரும் தர்ஷா குப்தா, சன்னி லியோன் நடிப்பில் வெளியான 'ஓ மை கோஸ்ட்' திரைப்படத்தில் நடித்த ஒரு BTS காட்சியின் மேக்கிங் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார் நடிகை தர்ஷா குப்தா. கவர்ச்சி மட்டுமல்ல உங்களுடைய நடிப்பு திறனையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் தர்ஷா இந்த வீடியோவை போஸ்ட் செய்துள்ளார். அதற்கு "கவர்ச்சியை தாண்டி உங்களின் உழைப்பையும் நடிப்புத் திறனையும் காட்டுங்கள்" என்று கூறிய அனைவருக்கும் இந்த ஓஎம்ஜி (OMG) படத்தின், BTS வீடியோவை சமர்ப்பிக்கிறேன் என ஒரு குறிப்பை பகிர்ந்துள்ளார் தர்ஷா குப்தா. 


சாதாரணமாக நடித்து விட முடியும் ஆனால் தலைகீழாக நடிப்பது அவ்வளவு எளிதல்ல. இந்த காட்சியில் நடிப்பதற்காக காலை முதல் மாலை 6 மணி வரைக்கும் இந்த காட்சியின் ஷூட்டிங் முடியும் வரைக்கும் பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் நடித்தேன். கடினமான உழைப்பு இல்லாமல் எதுவும் சாத்தியமல்ல. லவ் யூ ஆல் என போஸ்ட் செய்து இருந்தார் நடிகை தர்ஷா குப்தா. 


 







இதுவரையில் இவரை கலாய்த்து வந்த நெட்டிசன்கள் தர்ஷாவின் இந்த போஸ்ட் பார்த்த பிறகு வாய் அடைத்து போனார்கள். விமர்சனம் செய்தவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் தர்ஷா என வேறு சில தரப்பினர் பாராட்டி வருகிறார்கள்.