சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தனுஷ்


 நடிகர் தனுஷ் நடித்து சேகர் கம்முலா இயக்கிவரும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு குபேரன் என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜூனா இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். 


குபேரன் தவிர்த்து தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. எஸ்.ஜே சூர்யா, காலிதாஸ் ஜெயராமன், சந்தீப் கிஷன் , செல்வராகவன் , பிரபாகாஷ் ராஜ், சரவணன், அபர்னா பாலமுரளி, துஷாரா விஜயன் , வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்






அடுத்தடுத்து பல படங்களை வரிசையில் வைத்திருக்கிறார் தனுஷ் இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மே’ , வெற்றிமாறனுடன் வட சென்னை 2 , மாரி செல்வராஜுடன் ஒரு படம், அருண் மாதேஸ்வரனுன் கேப்டன் மில்லர் படத்தின் அடுத்த இரண்டு பாகங்கள் . இது தவிர்த்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற படத்தையும் அவர் இயக்கி வருகிறார் தனுஷ். இப்படியான நிலையில் தனுஷ் மற்றொரு புதிய படத்தில் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்த கூடுதலான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.


அமரன்


சிவகார்த்திகேயன்  , சாய் பல்லவி இணைந்து நடித்து உருவாகியுள்ள படம் அமரன். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 




மேலும் படிக்க : Siragadikka Aasai:தெரிய வரும் உண்மை...ரோகிணியை லெப்ட் ரைட் வாங்கிய விஜயா- சிறகடிக்க ஆசையில் இன்று!


Shanthi Williams: வாங்காத அடியே இல்லை.. நடுத்தெருவில் விட்ட கணவன்.. சாந்தி வில்லியம்ஸின் சோகக்கதை!