‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.  


நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திருச்சிற்றம்பலம் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. படத்திற்கு ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தை மர்மநபர்கள் சிலர் திரையரங்கில் கேமரா வைத்து முறையற்ற முறையில் ஒளிப்பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வகையில் Tamilrockers, Movierulz  உள்ளிட்ட பல இணையதளங்களில் இந்தப்படம் வெளியாகி இருக்கிறது. இதனைக்கேள்விப்பட்ட படக்குழு அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். 


 






ரோகிணி தியேட்டரில், பெரும்பாலான பிரபலங்கள் அவர்கள் நடித்த படத்தை பார்க்க செல்வது வழக்கம் அதுவும் முதல் நாள் முதல் ஷோவிற்கு செல்வது நடந்து வரும் விஷயம். நேற்றிலிருந்து தனுஷ் ரசிகர்கள், அவர் ரோகிணி தியேட்டருக்கு வருவார் என எதிர்ப்பார்த்திருந்தனர். அதற்கு ஏற்றது போல், நடிகர் தனுஷ் அனிரூத், நித்யா மேனன், ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் உடன் முதல் காட்சி பார்க்க அந்த தியேட்டருக்கு வந்தார்.


 






தனுஷ் நடிப்பில் வெளியான "யாரடி நீ மோகினி", "உத்தம புத்திரன்", "குட்டி" உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர்  4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


 






இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் தாய் கிழவி,மேகம் கருக்காதா பெண்ணே, தேன்மொழி ஆகிய 3 பாடல்களை எழுதியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தான் திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரோடு இயக்குநர்கள் வெற்றிமாறன், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.