‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கடைசி வரை செய்த நன்றி மறக்காமல்  இருப்பதே மாஸ் என்று தனுஷ் பேசினார்.  


தனுஷ் பேசும் போது, “ஒன்றரை வருஷம் கழிச்சு நம்ம படம் வருது. அதுனால மாஸான படமா இருந்தா நல்லாயிருக்கும் நிறைய பேர் சொன்னாங்க. படத்த பொருத்தவரைக்கும் நிறைய மாஸ் இருக்கு. இது எல்லாத்தையும் தாண்டி ஒரு மாஸ் இருக்கு. கடைசி காலத்துல குழந்தையா மாறுன அப்பா, அம்மாவை நல்ல படியா பார்த்துக்கிட்டா அது மாஸ். கடைசி வரை செஞ்ச நன்றிய மறக்காம இருந்தா அது மாஸ்.


நம்ம மேல தப்பு இல்லனாலும் கூட, அந்த சூழ்நிலை சரியாகுறதுக்காக, இறங்கி வந்து மன்னிப்பு கேட்டா அது மாஸ். அப்படிபார்த்தா திருச்சிற்றம்பலம் பயங்கரமான மாஸ் படம்தான். இந்தப்படத்தோட டைரக்டர் மித்ரன் ஆர்.ஜவஹர் ரொம்ப நல்ல மனுஷன். அவர் கூட வேலைபார்த்தது பெருமையா இருக்கு.






பாரதிராஜாவின் பெயர் உலகத்தமிழர்களின் அடையாளம். அனிருத்த எனக்கு சின்ன வயசுல இருந்து  தெரியும். அனிருத் இசையை இந்த உலகம் கேக்குறதுக்கு முன்னாடி நான் கேட்ருக்கேன். நான் கணிச்சதுல பெரிய கணிப்பு அனிருத். 10 வருஷத்துல நம்பர் 1 மியூசிக் டைரக்டரா இருப்பேன் சொன்னேன். இருக்காரு..


அவர் அடைய வேண்டிய உயரம் இன்னும் நிறைய இருக்கு. இந்தப்படம் ஒரு அப்பாவுக்கும் பையனுக்குமான இடையே நடக்கும் கதை. அப்பா.. நான் ஹீரோ ஆகணும் அப்படிங்கிறதுக்காக 5000 த்துக்கும் 10,000 த்துக்கும் நடுராத்திரில நீ நடையா நடந்தத நான் மறக்கவே மாட்டேன். நீ தான் என்னுடைய ஹீரோ. விஐபியும்,யாரடி நீ மோகினி இரண்டு படம் கலந்த கலவையா இருக்கும். 


தமிழில் மாறன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ‘தங்கமகன்’ படத்திற்கு தனுஷூம் அனிருத்தும் இணைந்து பணியாற்றுகின்றனர்.


இந்தத் திரைப்படத்தில் தனுசுடன் பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், பாரதிராஜா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்களை அண்மையில் வெளியிட்டது. இந்தப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும், ஏபிபி ஆப்பிலும் பின் தொடரலாம். 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண