தனுஷின் கார்பன் காப்பியாக யாத்ரா 


பிரபல நடிகரான தனுஷ், தனது மூத்த மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மேலும் அதில் அவர், “ இப்போது, நான் இதை முன்பு எங்கோ பார்த்திருக்கிறேன்” என்று பதிவிட்டதோடு, அதில் நானே வருவேன் ஹேஷ்டேக்கையும் இணைத்திருக்கிறார். இதன் மூலம் யாத்ரா நானே வருவேன் படத்தில் நடிக்கிறாரோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தனுஷின் இந்தப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  


 






முடிவுக்கு வந்த திருமணபந்தம்


நடிகர் தனுஷூம் ஐஸ்வர்யாவும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தங்களது 18 வருட திருமண பந்தத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்த தனுஷூம், ஐஸ்வர்யாவும் தங்களது சமூக வலைதளங்களில் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர். அந்தப்பதிவில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.


இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.


 






இவர்களுக்கு, யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, தொடர்ந்து தனது நடவடிக்கைகள், புகைப்படங்கள், குழந்தைகளின் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பதிவிட்டு வருகிறார். 


 


 




அந்த வகையில், கடந்த வருடம் யாத்ராவின் பிறந்த நாளன்று ஐஸ்வர்யா யாத்ராவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யாத்ரா தனுஷின் கார்பன் காப்பியாக இருக்கிறார் என்று கமெண்டுகளை பதிவிட்டு இருந்தனர். விவாகரத்திற்கு ஐஸ்வர்யாவும், தனுஷூம் தத்தமது வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். தனுஷ் வாத்தி படத்தில் பிஸியாக இருக்க,  ஐஸ்வர்யா தான் இயக்கிய Musafir ஆல்பம் உருவாக்கத்தில் பிஸியாக இருந்து வருகிறார். இதன் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது.