பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ஐ அடுத்து ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் அல்டிமேட். 5 சீசன்களில் கலந்து கொண்டவர்கள் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளனர். ஜனவரி கடைசியில் ஆரம்பிக்கப்பட்ட பிபி அல்டிமேட் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை இல்லையென்றாலும், சில எபிசோட்கள் கவனிக்க வைக்கின்றன. அந்த வரிசையில், காதலர் தின ஸ்பெஷல் எபிசோடில் வனிதா கண்ணீர் சிந்திய சம்பவம் வைரலாகியுள்ளது.


பிர்பவரி 14-ம் தேதி அன்று ஒளிபரப்பான எபிசோடில், காதலர் தினம் சிறப்பாக ஒவ்வொரு போட்டியாளரும் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நபரைப் பற்றி பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய வனிதா, தனது மகள் ஜோவிக்கா பற்றி பகிர்ந்திருக்கிறார். அதில், ஜோவிக்காவின் அன்புதான் தனக்கு நிரந்திரமாக கிடைத்த அன்பு என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.



தொடர்ந்து பேசிய அவர், ஜோவிக்கா என் மீது வைத்திருக்கும் அன்பு போல வேற யாரும் எனக்கு அன்பு செலுத்தியது கிடையாது. அவளது அன்பை பார்க்கும்போது எனக்கு வேறு அன்பு தேவையில்லை என்ற எண்ணம் தோன்றும். இதுவே போதுமானது. என்னுடைய மகள் பிறக்கும்போது எனக்கு 25 வயது. அவள் பிறந்தபோது என் அம்மா இறந்துவிட்டார்கள். அப்பாவின் ஆதரவு இருக்கவில்லை. என்னுடைய குடும்பம் பெரியது. ஆனால், அனைவரும் என்னை கைவிட்டனர். எனக்கு மூன்று குழந்தைகள். அதில், என்னுடைய முதல் மகன் என்னை கைவிட்டுவிட்டான். சில பிரச்னைகள் காரணமாக கடைசி குழந்தை என்னோடு சில நாட்களுக்குதான் இருக்க முடியும்.


காவல் நிலையம், நீதிமன்றம் என நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன். என் அப்பாவே என்மீது புகார் தந்தார். சொந்த வீட்டில் இருந்து என்னை துறத்தினார்கள். கிழந்த நைட்டியோடு வெளியே சென்றேன். அப்போது எனக்காக நின்று ஆதரவு தந்தது எனது மகள் மட்டும்தான். அவள் என்னோடு இருக்கும்போது அம்மா இல்லையென நான் வருந்தியது கிடையாது. அவள் எனக்கு அம்மா மாதிரி. நான் சிறப்பாக விளையாட வேண்டுமென என்னை ஊக்கப்படுத்துவது அவள்தான். என்னை அதட்டுவது அவள் மட்டும்தான்” என கண் கலங்க பகிர்ந்திருக்கிறார். வனிதாவின் கதையை கேட்டு மற்ற போட்டியாளர்களும் கண் கலங்கினர். சிலர் ஆறுதல் சொல்லி அவரை தேற்றினர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண