கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை படு பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், மற்றொருபுறம் டைரக்‌ஷனிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Continues below advertisement

வாத்தி, கேப்டன் மில்லர் என தனுஷின் படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், தற்போது சினிமா துறையில் தனக்கும் மிகவும் விருப்பமான இயக்கத்தில் மீண்டும் கால் பதிக்கவிருக்கிறார்.

ஏற்கெனவே ராஜ்கிரண், ரேவதி, மடோனா நடித்த 'பவர் பாண்டி' படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமான நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

நடிகர்கள் விஷ்ணு விஷால் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கவிருப்பதாக ஏற்கெனவே செய்தி வெளியான நிலையில், தற்போது நட்சத்திரம் நகர்கிறது படம் மூலம் கவனமீர்த்த காளிதாஸ் ஜெயராம் - துஷாரா ஜோடியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த ஜோடி ஏற்கெனவே இயக்குநர் பாலாஜி மோகனின் படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது தனுஷ் இயக்கும் படத்திலும் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள நிலையில், படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அஜித்குமார் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவனும், தனுஷும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளியானது.