நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்


ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். பிரியங்கா மோகன் மற்றும் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. Gen Z கிட்ஸ்களின் காதலை மையமாக வைத்து ரொமாண்டிக் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் பலரால் பாராட்டப்படுகிறது. அந்த வகையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தைப் பார்த்த திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Continues below advertisement


தனுஷ் படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்


" தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை பார்த்தேன். ஒரு வழக்கமான காதல் கதை என்றாலும் இந்த கதையில் தனுஷ் உருவாக்கியிருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் என்னை ரொம்பவும் வியப்பூட்டியது . படம் பார்க்கும் அனைவருக்கும் இதே வியப்பு ஏற்படும். காதலின் இன்னசன்ஸை மிக அழகாக இந்த படத்தில் தனுஷ் கொண்டு வந்திருக்கிறார் " என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்








மேலும் படிக்க : இப்போவே ப்ரோமோஷனைத் தொடங்கிய சூர்யா..காமிக் வடிவில் வெளியான ரெட்ரோ BTS


தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலர் இதோ