ரெட்ரோ
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது நடித்துள்ள படம் ரெட்ரோ. சூர்யாவின் 44 ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே , பிரகாஷ் ராஜ் , ஜோஜூ ஜார்ஜ் , கருணாகரன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார் . வரும் மே 1 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
வெற்றிக்காக காத்திருக்கும் சூர்யா
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வழியாக சூர்யா கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் ரொம்ப ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பிரம்மாண்டமான வெற்றிபெற்றதால் ரெட்ரோ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் குவிந்துள்ளன.
ரெட்ரோ படத்தின் டைட்டில் டீசர் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றது. ரொமாண்டிக் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் சூர்யாவின் கரியரில் மற்றொரு பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்
காமிக் வடிவில் வெளியான ரெட்ரொ BTS
ரெட்ரோ படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை இப்போதிருந்தே தொடங்கியுள்ளது படக்குழு. அந்த வகையில் ரெட்ரோ படத்தின் BTS காட்சிகளை காமிக் வடிவில் வெளியிட்டுள்ளார்கள். படப்பிடிப்பில் நடந்த உரையாடல்களை வைத்து சுவாரஸ்யமான காமிக் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
சூர்யா 45
சூர்யா தற்போது ஆர். ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார். சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். கோயம்புத்தூரில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.