குபேரா

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. வாத்தி படத்தைத் தொடர்ந்து இரண்டு முறையாக தனுஷ்  தெலுங்கு இயக்குநரோடு பணியாற்றியுள்ளார். தனுஷின் வாத்தி திரைப்படம் உலகளவில் ரூ 100 கோடி வசூலித்தது. இப்படம் தமிழ்நாட்டில் ரூ 35.20 கோடியும் ஆந்திரா மற்றும் தெலங்கான  மாநிலங்களில் ரூ 41.25 கோடியும் வசூலித்தது. தற்போது குபேரா திரைப்படமும் தமிழைக் காட்டிலும் தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது

Continues below advertisement

100 கோடி வசூலித்த குபேரா

குபேரா திரைப்படம் தெலுங்கில் இதுவரை ரூ 43.01 கோடியும் தமிழில் ரூ 16.06 கோடியும் வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக குபேரா திரைப்படம் இதுவரை 100 கோடிவரை வசூலித்துள்ளது. தெலுங்கில் குபேரா படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தமிழ் நாட்டில் முதல் வாரத்திலேயே படத்தின் வசூல் சரிவை நோக்கி சென்று வருகிறது

குபேரா திரைப்படம் 100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. தனுஷ்  நடித்து முன்னதாக தெலுங்கில் வெளியான வாத்தி திரைப்படமும் 100 கோடி வசூலித்த நிலையில் தற்போது குபேரா திரைப்படமும் 100 கோடி வசூல் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு தனுஷின் ராயன் திரைப்படமும் உலகளவில் ரூ 160 கோடி வசூலித்தது.  Wealth. Wisdom. And now... ₹100+CR worth of WAVE 🌊#Kuberaa rules with a grand century at the box office.🔥 Book your tickets now: https://t.co/4LlzXfPwzT #Kuberaa#BlockBusterKuberaa #SekharKammulasKuberaa #KuberaaInCinemasNow pic.twitter.com/xKr1UYXP60

Continues below advertisement

ரஜினியைத் தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார் நடிகர் தனுஷ். ரஜினிக்குப் பின் தனுஷின் குபேரா திரைப்படம் மட்டுமே  ரிலீஸான முதல் வாரத்தில் தொடர்ச்சியாக இரட்டை இலக்கு வசூல்  ஈட்டி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத் தக்கது. குபேரா படத்தின் நீளம் காரணமாக தமிழ் ரசிகர்களிடம் இந்த படம் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. மறுபக்கம் தெலுங்கு ரசிகர்கள் தனுஷின் நடிப்பை கொண்டாடி வருகிறார்கள்.