அரண்மனை படத்தின் அடுத்தடுத்த இரண்டு பாகங்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து சுந்தர்.சி , தற்போது அதன் மூன்றாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். அரண்மனை 3 என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, ஆண்ட்ரியா மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்தில் ஆண்ட்ரியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது தவிர மறைந்த நடிகர் விவேக் , யோகிபாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துத்துள்ளனர். நடிகர் விவேக் அவர்கள் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் அரண்மனை 3 என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அரண்மை 3 படத்தின் டிரைலர் வெளியானது. அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது , முந்தைய பாகங்களை காட்டிலும் அரண்மனை 3 படத்தில் கூடுதல் த்ரிலிங் காட்சிகளை இணைத்துள்ளார் இயக்குனர். டிரையிலரின் ஒரு காட்சியில் ஆண்ட்ரியா கர்பிணியாக இருப்பது போல காட்டியுள்ளனர். வழக்கமாக பெண்கள் உடம்பில் பேய் புகுந்திருப்பதை போல காட்டும் சுந்தர் சி. அரண்மனை 3 படத்தில் ஆர்யா உடம்பில் பேய் இருப்பது போல காட்டியிருப்பதால் , கூடுதல் சுவாரஸ்யமாகவுள்ளது.
படம் வருகிற அக்டோபர் 14 அன்று ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார் சுந்தர்.C . குஷ்பு படத்தை தயாரித்துள்ளார். அரண்மனை 3 படத்திற்கு C.சத்யா இசையமைத்துள்ளார் இந்த படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் உதயநிதி பெற்றுள்ளார். அரண்மனை 3 படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் நிலையில் சுந்தர்.சி, தலைநகரம் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளாராம். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க சுந்தர் சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஷன் டிராமாவாக உருவாக உள்ள அந்த படத்தில் தனுஷை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைப்பெற்று வருகிறதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.