தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3ஆம் தேதி பயணிப்பதற்காக அரசுப் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என்பதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல பதிவு செய்யலாம். சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல சொகுசு பஸ், படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படுகின்றன.


சிறப்புப் பேருந்துகள் நிலையங்கள் அமைத்தல், சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பை போக்குவரத்துத்துறை அமைச்சர் வெளியிடுவார் என்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 


https://www.tnstc.in/ என்ற இணையதளம், TNSTC ஆப் உள்ளிட்ட அரசு ஆப் மற்றும் தனியார் போக்குவரத்து ஆப்களிலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.