இந்தப்படம் திரையரங்குகளில் ரசிகர்கள் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகும் என்று படக்குழு மிகவும் எதிர்பார்த்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த படம் சில தினங்களுக்கு முன்பு OTT-யில் வெளியானது. இந்த படத்தின் ஆடியோ மற்றும் சிங்கள் பாடல்களும் இணைய வாயிலாகவே வெளியிடப்பட்டன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த திரைப்படத்திற்கான பணிகள் கடந்த 2018ம் ஆண்டுக்கு முன்பே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதலில் தேனாண்டாள் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்து நிலையில் சில காரணங்களால் கைவிடப்பட்டது. 






அதன் பிறகு மீண்டும் இந்த படம் கடந்த 2019-ஆம் ஆண்டு YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று 2019 டிசம்பர் வாக்கில் படப்பிடிப்பு முடிவடைந்தது. அதன் பிறகு 2020ம் ஆண்டு மே மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படம் OTT-யில் வெளியிடவாய்ப்புள்ளதாக அப்போது கூறப்பட்டது. இறுதியில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை OTT-யில் 17 மொழிகளில் வெளியிட்டு அசத்தியது. இணைய வழியில் 17 மொழிகளில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் ஜகமே தந்திரம், என்றும் கூறப்படுகிறது.                  






இந்நிலையில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், கலவையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் Netflixல் இந்தியா, மலேசியா, UAE உள்பட 7 நாடுகளில் ஜகமே தந்திரம் திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது. ஒரு இந்திய திரைப்படம் சுமார் 7க்கும் அதிகமான நாடுகளில் Netflixல் முதலிடம் வகிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. Netflixல் ஜகமே தந்திரம் வெளியான முதல் ஒரு வாரத்தில் அதன் பார்வையாளர்களில் பாதிபேர் வெளிநாடுகளில் உள்ளவர்கள் என்றும் Netflix இந்தியா தெரிவித்துள்ளது. 


தற்போது இந்த தகவல் அறிந்த தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்கள் இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர். மேலும் இயக்குநர் சுப்புராஜ் இந்த வெற்றியை சாத்தியமாகிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.