ஜகமே தந்திரம், திரையரங்குகளில் ரசிகர்கள் ஆர்பரிப்புக்கு மத்தியில் இந்த படம் வெளியாகி சூப்பர்ஹிட்டாகும் என்று படக்குழு மிகவும் எதிர்பார்த்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த படம் நேற்று OTT-யில் வெளியானது. இந்த படத்தின் ஆடியோ மற்றும் சிங்கள் பாடல்களும் இணைய வாயிலாகவே வெளியிடப்பட்டன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த திரைப்படத்திற்கான பணிகள் கடந்த 2018ம் ஆண்டுக்கு முன்பே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதலில் தேனாண்டாள் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்து நிலையில் சில காரணங்களால் கைவிடப்பட்டது. 






அதன் பிறகு மீண்டும் இந்த படம் கடந்த 2019ம் ஆண்டு YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று 2019 டிசம்பர் வாக்கில் படப்பிடிப்பு முடிவடைந்தது. அதன் பிறகு 2020ம் ஆண்டு மே மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படம் OTT-யில் வெளியிடவாய்ப்புள்ளதாக அப்போது கூறப்பட்டது. இறுதியில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை OTT-யில் 17 மொழிகளில் வெளியிட்டு அசத்தியது. இணைய வழியில் 17 மொழிகளில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் ஜகமே தந்திரம், என்றும் கூறப்படுகிறது.                  


இந்நிலையில் நேற்று படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கதைக்களத்தில் பெரிய அளவில் அழுத்தம் இல்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது. சிலர் இது ஜூங்கா படம் மாதிரி இருக்கே?, அந்த படத்தோட இரண்டாம் பாகமா இருக்குமோ என்று கூறிவருவதையும் நம்மால் இணையத்தில் பார்க்கமுடிகிறது. மதுரை என்றாலே ரத்தம் ரணம் ரௌத்திரம் தான் என்றும், மதுரையில் இருந்து லண்டனுக்கு ரௌடிசம் செய்ய தனுஷ் செல்வதும், நம்பமுடியாத கற்பனை என்று பலர் முணுமுணுக்க. இதுதான் 'சினிமாத்துவம்' என்று நினைக்கத்தோன்றுகிறது.


Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..! 




குறிப்பாக ஈழத்தமிழ் மக்களை பெரிய அளவில் காயப்படுத்தும் விதித்ததில் படத்தின் கதைக்களம் முழுவதும் நகர்கின்றது என்பது பொதுவான கருத்தாக உள்ளது. வெறும் ஹீரோயிசத்தால் சாதிக்க முடியாத சமூகப்பிரச்னைகளை சுருளி என்ற தனிமனிதன் செய்து முடிக்கிறான் என்பதே கதைக்களம் என்று வரும்போது இது சினிமாத்துவத்தின் உச்சம் என்றால் அது மிகையல்ல. சமூகப்பிரச்சனை, அரசியல் என்று எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு ஒரு ரசிகனாக இந்த படத்தை பார்க்கும் அனைத்து தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்கள் பாராட்டும் ஒரு படமாக அமைந்துள்ளது ஜகமே தந்திரம்.