தற்போது இந்த எமோஜி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனுஷ் படத்திற்கு கிடைத்துள்ள முதல் ட்விட்டர் எமோஜி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் இதற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா, தளபதி விஜயின் மெர்சல் மற்றும் பிகில் மற்றும் சூர்யாவின் என்.ஜி.கே ஆகிய திரைப்படங்களுக்கு எமோஜி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. சுருளியின் மீசை தற்போது எமோஜியாக மாறியுள்ளது தனுஷ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் YNOT ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் கடந்த ஜூன் 1ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. லண்டன் தாதாவாக களமிறங்கும் தனுஷின் அசத்தலான நடிப்பில் பட்டையை கிளப்பும் ட்ரைலராக வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து தனுஷ் எழுதி பாடிய 'நேத்து, ஓர கண்ணில் நான் உன்ன பாத்தேன்.. நேத்து, ஜட செஞ்சு நீ என்ன பாத்த..' என்ற வீடியோ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
2016ம் ஆண்டு இந்த படத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் தேனாண்டாள் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்து நிலையில் சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் இந்த படம் கடந்த 2019ம் ஆண்டு YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று 2019 டிசம்பர் வாக்கில் படப்பிடிப்பு முடிவடைந்து post production பணிகள் தொடங்கப்பட்டது. அதன் பிறகு 2020ம் ஆண்டு மே மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படம் OTT தளத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக அப்போது கூறப்பட்டது.
கலையும், காதலும் சேர்ந்த வலி சலங்கை ஒலி! 39வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அழகிய படைப்பு!
வருகிற ஜூன் 18-ஆம் தேதி தனுஷின் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது என்ற அதிகாரபூர்வ தகவலை ஒய் நாட் ஸ்டுடியோ (y not studio ) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இந்தப் படம் தமிழ் ,தெலுங்கு , மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஓடிடியில் வெளியாகும் தமிழ்ப்படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.