2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படமும், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படமும் நேருக்கு நேர் மோதுவதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


தனுஷ் - சிவகார்த்திகேயன்


நடிகர் தனுஷ் பற்றிய நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அவர் நடிப்பு மட்டுமல்லாது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவர். அப்படிப்பட்ட தனுஷ் தான் சிவகார்த்திகேயனின் ஆரம்பகட்ட சினிமா வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார் என்பது மறுப்பதற்கில்லை. 


விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன் 2011 ஆம் ஆண்டு வெளியான மெரினா படத்தின் மூலம் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுக்கிறார். ஆனால் தனுஷ் நடித்த 3 படத்தில் தனுஷின் நண்பராக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். சில காட்சிகளே வந்தாலும் இந்த படத்தின் அவரது நகைச்சுவை ரசிகர்களை கவர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பாளராக அறிமுகமானார்.



வுண்டர்பார் நிறுவனத்தின் முதல் படமாக நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த எதிர்நீச்சல் படம் வெளியானது.  இந்த படம் 2013 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து தனுஷ் தயாரித்த காக்கிச்சட்டை படத்திலும் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். 


ALSO READ | Ayalaan Twitter Review: காத்திருப்புக்கு கிடைத்ததா வெற்றி? சிவகார்த்திகேயனின் “அயலான்” ட்விட்டர் விமர்சனம் இதோ!


ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை. தனுஷ் சிவகார்த்திகேயன் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய தகவல் வெளியாகி இருந்தது.  அதே சமயம் இந்த தகவல் குறித்து தனுஷ் சிவகார்த்திகேயன் தரப்பில் யாரும் விளக்கம் அளிக்கவில்லை. இப்படியான நிலையில் தான் முன்னணி நடிகராக வளர்ந்து விட்ட நிலையில் தன்னை வளர்த்து விட்ட தனுஷூக்கு எதிராக சிவகார்த்திகேயன் அயலான் படத்தை களம் இறக்கி உள்ளது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் டிக்கெட் முன்பதிவு செயலிகளில் எந்த படத்தை அதிகம் பார்க்க விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு அயலான் படம் கேப்டன் மில்லரை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளது தனுசு ரசிகர்களை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சினிமாவில் தன்னுடைய ஆரம்ப காலக்கட்டத்தில் பெரும் உதவியாய் இருந்த தனுஷ் படத்துக்கு எதிராக சிவகார்த்திகேயன் படம் ரிலீசாகியுள்ளது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் பெரும் பொருட்செலவில் தயாரான அயலான் நேற்று மாலை வரை ரிலீசாகுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் படத்தின் மீதான இடைக்கால தடையை நீதிமன்றம் நீக்கியதால் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் 2வது பொங்கல் படமாக “அயலான்” வெளியாகியுள்ளது. 


ALSO READ | Captain Miller Twitter Review: நடிப்பில் தெறிக்கவிட்ட தனுஷ்.. கேப்டன் மில்லர் எப்படி இருக்கு? - ட்விட்டர் விமர்சனம் இதோ..!