Ayalaan Twitter Review in Tamil: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் (Ayalaan) படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இப்படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அயலான்:
கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள “அயலான்” படத்தின் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 2வது படமாக அயலானை இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாகவும் முக்கிய கேரக்டர்களில் சரத் கேல்கர், ஈஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஏலியன் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள அயலான் படம் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் ஒரு வழியாக இன்று பொங்கல் வெளியீடாக இப்படம் வெளியாகியுள்ளது. ரஜினி முருகன் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் 2வதாக வெளியான பொங்கல் வெளியீட்டு படம் “அயலான்” ஆகும். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள அயலான் படம் ஹாலிவுட் தரத்திலான மேக்கிங்கில் மிரட்டியுள்ளது.
ட்விட்டர் ரிவியூ:
தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நள்ளிரவு முதலே தியேட்டரில் குவிந்தனர். தொடர்ந்து காலை முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை காணலாம்.
“அயலான் படம்தான் இந்த முறை வெற்றி பெறும். திரைக்கதை நன்றாக உள்ளது. சாதாரண காட்சிகளே ப்ரெஷ்ஷாக தெரிகிறது. கண்டண்ட் படி பார்த்தால், குழந்தைகளின் ஆக்ஷன் படம் போல் உள்ளது. ஆகமொத்தம், ஒரு நல்ல படம்.” - வெளிநாட்டில் படம் பார்த்த ஒருவரின் கருத்து.
“படம் அழகாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மிகவும் பிடித்திருந்தது. இது ஒரு ஃபன்னான படம்” - முதல் பாதி பற்றி ஒருவரின் கருத்து.
“சிவகார்த்திகேயனுக்கு சாதாரண இண்ட்ரோ சீன்தான் வைக்கப்பட்டுள்ளது. இது வரை நன்றாகதான் உள்ளது.” - முதல் பாதி பற்றிய ஒருவரின் ட்விட்டர் விமர்சனம்
“முதல் பாதியில் கொடுக்கப்பட்டுள்ள பில்ட்-அப் சூப்பர். சிவகார்த்திகேயனால் மட்டும்தான் இப்படி செய்ய முடியும். இது நிச்சயமாக அதரபழைய கதை கிடையாது. இது ப்ரெஷ்ஷாக உள்ளது. ஏலியனின் குரல் மட்டும் ஒருவிதமாக இருந்தது. இரண்டாம் பாதிக்காக வெயிட்டிங்.. ஏ.ஆர் ரஹ்மானின் இசை ஒரு மாஸ்டர் பீஸ். - தனி நபர் ஒருவரின் ட்விட்டர் விமர்சனம் ”
“எங்கும் பாசிட்டீவ் விமர்சனம்தான் பரவிவருகிறது.” - பொதுமக்களின் கருத்து