தனுஷின் மூன்றாவது படம்


 நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என அசத்திக் கொண்டிருந்த நடிகர் தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மக்களிடம்  நல்ல வரவேற்பைப் பெற்ற போதிலும் இயக்குநராக தான் இன்னும் நிறைய கற்றுகொள்ள வேண்டும் என்பதால் சிறிது காலம் இடைவேளை எடுத்துக் கொண்டார் தனுஷ். இதனைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படத்தை இயக்கி  நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள தனுஷ் உடனடியாக தனது மூன்றாவது படத்தின் வேலைகளையும் தொடங்கிவிட்டார்.


நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்






வண்டபார் சார்பில் கஸ்தூரி ராஜா மற்றும் விஜயலக்‌ஷ்மி கஸ்தூரி ராஜா இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ‘ நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது. பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன் மற்றும் ரம்யா ரங்கநாதன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பதிண் வயது இளைஞர்களுக்கு இடையிலான காதலை மையப்படுத்திய படமாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் படி இந்தப் படத்தை முதலில் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


தனுஷ் நடித்து செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய திரைப்படம் வி.ஐ.பி 2. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகிய இந்தப் படம் சுமாரான வெற்றி பெற்றது. செளந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வி.ஐ.பி படத்தின்போது தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற கதை எழுதியிருப்பதாகவும் அதை தான் இயக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிக்க தகுந்த நடிகர்கள் கிடைக்காத காரணத்தினால் தான் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். “


கேப்டன் மில்லர்


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்  நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். ஷிவராஜ்குமார், பிரியங்க மோகன் , சந்தீப் கிஷன், உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலன்று இந்தப் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது