தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, தற்போது ரியல் பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான், தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக 'ராயன்' திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷின் 50-ஆவது படமாக வெளியான இந்த படத்தை அவரே இயக்கி, நடித்திருந்தார். வட சென்னை பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், ரூ.100 கோடி வசூல் சாதனை செய்தது.

Continues below advertisement


இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், இன்று தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'குபேரா' திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் காமுலா இயக்கியுள்ளார். தனுஷுடன் இணைந்து, நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.




ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான 'குபேரா' திரைப்படம் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக தனுஷின் நடிப்பை பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவருவதால்... வரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.


இந்நிலையில், 'குபேரா' படம் முதல் நாளில் இந்தியாவில் எவ்வளவு வசூல் செய்யும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. sacnilk கருத்துக்கணிப்பில் படி, 'குபேரா' முதல் நாளில் 9.66 கோடி வசூல் செய்யும் என கூறப்படுகிறது.