பிரான்ஸில் 2000 டிக்கெட்களை விற்று சாதனைப் படைத்துள்ளது தனுஷ் நடித்த 3 படம்.


3


சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் பெரிய அளவில் மக்களை திருப்திபடுத்தவில்லை. ஒரு படம் இரண்டு வாரங்களுக்கு மேல் திரையரங்கில் ஓடுவது சிரமமாகி விட்டது. இப்படியான நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்களை ரீரிலீஸ் செய்து வருகின்றன திரையரங்குகள். விஜய், அஜித், தனுஷ், ரஜினி, சிம்பு என முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ச்சியாக ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டு வைரலான படம் 3.


கடந்த 2011ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் 3. தனுஷ், ஷ்ருதி ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிடவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் சமீபத்தில் இப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியானது. 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் என இரு தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகிறார்கள். திரையரங்குகளில் படத்தின் ஒவ்வொரு பாடல் வரும்போதும் ஒன்ஸ் மோர் கேட்டு கான்ஸர்ட் நிகழ்ச்சிப்போல் சேர்ந்து பாடுகிறார்கள். சென்னை கமலா திரையரங்கில் இப்படம் புது படத்தைவிட அதிக வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. கொலவெறி பாடலின் மூலம் இந்தப் படம் தமிழ் மட்டுமில்லாமல் சர்வதேச ரசிகர்களிடமும்  அங்கீகாரம் பெற்றது. சமீபத்தில் இப்படம் பிரான்ஸ் நாட்டில் பாரிஸில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. 


ரஜினி படத்தை முறியடித்து சாதனை






இதுவரை பிரான்ஸ் நாட்டில் வெளியான தமிழ் படங்களில் அதிக டிக்கெட்கள் விற்ற படம் ரஜினி நடித்த பாபா. அதிகபட்சமாக 1000 டிக்கெட்கள் இந்தப் படத்திற்கு விற்கப்பட்டன. தற்போது இந்த சாதனையை தனுஷின் 3 படம் முறியடித்துள்ளது. 2000க்கும் மேற்பட்ட டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாக 3 படத்தை விநியோகம் செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது. படம் வெளியாகி 13 ஆண்டுகள் கடந்தப் பின்னும் தனுஷின் 3 படம் ஏதோ ஒரு வகையில் ஒரு சாதனையைப் படைத்து வருகிறது. 




மேலும் படிக்க : Thalapathy Vijay: தன்னோட இயக்குநர் செத்தப்ப கூட வரல.. விஜய்யை சரமாரியாக விமர்சித்த துணை இயக்குநர்!


AR Rahman: இசையமைப்பாளருக்கு இப்படிப்பட்ட படம் பரிசு - ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டித் தள்ளிய படம் எது தெரியுமா?