டிமாண்டி காலணி 2


அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி பிரியா பவாணி சங்கர் நடிப்பில் உருவான படம் டிமாண்டி காலணி. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றது. டிமாண்டி காலணி முதல் பாகம் பெரியளவில் வெற்றிப்பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து சமீபத்தில் இயக்கிய கோப்ரா திரைப்படம் தோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தின் தோல்வி இயக்குநர் அஜய் ஞானமுத்து மீது பல்வேறு விமர்சனங்களுக்கு வழி வகுத்தது. தற்போது டிமாண்டி காலணி படத்தின் வெற்றி அவர் மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் விதமாக அமைந்துள்ளது.


ராசியில்லாத நடிகை பிரியா பவாணி சங்கர் 


படத்தின் இயக்குநர் மட்டுமில்லாமல் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியா பவாணி சங்கர் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்ப்ட்டன. குறிப்பாக சமீபத்தில் வெளியான இந்தியன் படத்தின் தோல்வி அவரை பெரிதும் பாதித்தது. பிரியா பவாணி சங்கர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால் அவரது ராசி அப்படி என்கிற வகையிலான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இதுகுறித்து பல்வேறு நேர்கானல்களில் பிரியா பவாணி சங்கர் பேசியிருந்தார். " ஒரு படம் வெற்றிபெற்றால் அதற்கு நான் தான் காரணம் என்று யாரும் பாராட்டுவதில்லை. ஆனால் ஒரு படம் தோல்வி அடைந்தால் அதன் முழு பழியை என்மேல் சுமத்துவது எப்படி நியாயமானது. கமல் மாதிரியான ஒரு நடிகர் இருந்தும் ஒரு படம் தோல்வி அடைகிறது என்றால் நான் அதில் என்ன செய்ய முடியும்' என்று அவர் கூறியிருந்தார். தற்போது டிமாண்டி காலணி 2 படத்தின் வெற்றி அவர் மீதான் விமர்சனங்கள் வெறும் மூட நம்பிக்கையே என்று  நிரூபித்திருக்கிறது என்று சொல்லலாம்.


அருள்நிதி


மற்ற நடிகர்களைப் போல் தொடர்ச்சியாக படங்களில் நடிக்காமல் அவ்வப்போது கவனமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அருள்நிதி. வம்சம் , மெளனகுரு , ஆறாது சினம் , சமீபத்தில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் ஆகியவை  அருள்நிதியின் கரியரில் குறிபிட்டு சொல்லும்படியான படங்கள். அந்த வரிசையில் டிமாண்டி காலணி 2 படம் அருள்நிதியின் கரியரில் அதிக வசூல் ஈட்டிய படமாக மாறியுள்ளது. 


டிமாண்டி காலணி 2 வசூல்






டிமாண்டி காலணி 2 இதுவரை உலகளவில் 55 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அடுத்த வாரம் விஜயின் தி கோட் படம் வெளியாகும் வரை இப்படம் திரையரங்கில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.