பாலிவுட் பிரபலங்கள் எகானமி வகுப்பில் பயணிப்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயம். அப்படி அது அரிதான ஒரு விஷயம் என்றாலும் சமீப காலங்களில் விக்கி கௌஷல் - கத்ரீனா கைஃப், கார்த்திக் ஆர்யன் மற்றும் பலர் எகானமி வகுப்பில் பயணித்துள்ளனர். இவர்கள் இந்த எகானமி வகுப்பில் பயணித்ததை ரசிகர்களால் காண முடிந்தது.
எகானமி வகுப்பில் பயணம் :
அவர்களின் வரிசையில் சில தினங்களுக்கு முன்னர் எகானமி வகுப்பில் பயணித்துள்ளார் தீபிகா படுகோன். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. தீபிகா படுகோன் ரெஸ்ட் ரூம் நோக்கி நடைபாதையில் நடந்து செல்வதை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபிகா படுகோன் ஆரஞ்சு மற்றும் நீல நிறத்திலான ட்ராக் சூட், சன் கிளாஸ் மற்றும் கேப் அணிந்து இருந்தார். இந்த வீடியோவை பார்த்த பலரும் தீபிகா எப்படி எளிமையாக, பண்புடன் இருக்கிறார் என்றும் எகானமி வகுப்பில் அவரின் பயணம் பற்றிய அனுபவம் குறித்தும் கேட்டு வருகிறார்கள்.
பிஸியான ஷெட்யூல் :
சித்தார்த் ஆனந்த் நடிப்பில், தீபிகா படுகோன் - ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பதான்' திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனைகளை படைத்து வருகிறது. அடுத்ததாக ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து ஃபைட்டர் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தீபிகாவின் பைப் லைனில் பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் திஷா பதானி ஆகியோருடன் ப்ராஜெக்ட் கே, அமிதாப் பச்சனுடன் தி இன்டர்ன் படத்தின் இந்தி ரீ மேக் மற்றும் அஜய் தேவ்கனுடன் சிங்கம் 3 உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து அவரின் ஷெட்யூலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.