தண்ணீர் என்பது அத்தியவசியமான பொருள். தண்ணீர் இன்றி எந்த உயிரினத்தாலும் வாழ முடியாது. இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், தண்ணீர் போன்ற அத்தியவசியமான பொருள் கிடைக்காத பல கிராமங்கள் இன்னும் இந்தியாவில் உள்ளன. ஒரு வாளி தண்ணீர்க்காக மக்கள் பல மைல் தூரம் பயணிக்க வேண்டிய சூழல் தான் இந்தியாவில் இன்னமும் நிலவுகிறது.


இதுபோன்ற சூழல்தான் மகாராஷ்டிராவில் உள்ள காதியல் கிராமத்தில் நிலவுகிறது. இன்னும், சொல்லபோனால், அங்கு நிலைமை மோசமாக உள்ளது. ஒரு வாளி தண்ணீர்க்காக அக்கிராம மக்கள் உயிரையே பணயம் வைக்கின்றனர்.


 






இதுகுறித்து கிராமவாசி ஒருவர் கூறுகையில், "இந்த கிராமத்தில் இரண்டு கிணறுகள்தான் உள்ளன. அந்த இரண்டும் கிட்டத்தட்ட வறண்டுவிட்டன. 1500 மக்கள் தொகை கொண்ட இந்த கிராமம் 2-3 டாங்குகளை நம்பியே உள்ளன.


இரண்டு டாங்கு வாகனங்கள் மூலம் தான் ஒட்டு மொத்த கிராமத்திற்கும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. வறண்டு போன கிணறுகளில் இதன்மூலம் தான் தண்ணீர் நிரப்பப்படுகிறது. அந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க மக்கள் தங்களின் உயிரையே பணயம் வைக்கின்றனர்.






 


அழுக்கான தண்ணீர் குடிப்பதால் மக்களுக்கு நோய் பாதிப்பு அதிகரிக்கிறது. நோயால் மக்கள் பாதிக்கப்பட்டாலும், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு கூட சாலை இல்லை" என்றார்.


இம்மாதிரியான, அடிப்படை வசதிகளான தண்ணீர், சாலை, மருத்துவமனை இல்லாமல் இந்தியாவில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இதற்கு ஒரே தீர்வு என்பது மக்களின் தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்வதே ஆகும். அதற்கு, அரசியல்வாதிகளும் அரசு அலுவலர்களும் முன்வர வேண்டும் என்பகே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.