சினிமாவில் நடிப்பதை விட முன்னணி திரைப் பிரபலங்களுக்கு விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம். இந்தி நடிகர், நடிகைகள் பலர் பிஸ்னஸிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிடைக்கின்ற வருமானத்தில் திரைத்துறையினர் அதிகமான வரி செலுத்துகின்றனர். அக்ஷய் குமார், ஷாருக்கான் உள்ளிட்ட நடிகர்கள் அதிக தொகையை வரியாக செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிக வருமான வரி செலுத்தும் இந்திய நடிகை என்ற பெருமையை தீபிகா படுகோன் பெற்றுள்ளார். 2016-17ஆம் ஆண்டில் இருந்து இவர், ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வரி கட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டும் 10 கோடிகள் வரை வரி செலுத்தி அதிக வரி செலுத்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுக்கு தீபிகா படுகோனின் வருவாய் ரூ.40 கோடி எனக் கூறப்படுகிறது. ஒரு படத்துக்கு ரூ.15 கோடி வரை தீபிகா சம்பளம் பெறுகிறார்.
விளம்பரத் தூதுவராக இருந்து ரூ.10 கோடி வரை சம்பாதிக்கிறார் தீபிகா. 2019ஆம் ஆண்டு ரூ.49 கோடி சம்பாதித்ததாகவும் பத்மாவதி படத்தில் நடிக்க தீபிகா ரூ.12 கோடி சம்பளமாக பெற்றதாகவும் தகவல் வெளியானது.
அதே ஆண்டு ரஜினிகாந்த், அஜய் தேவ்கான், ரோஹித் சர்மா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி அதிக வருவாய் ஈட்டிய டாப் 10 பிரபலங்கள் பட்டியலிலும் இடம்பிடித்தார் தீபிகா படுகோன். அலியா பட் ஆண்டுக்கு ரூ.5 முதல் ரூ.6 கோடியும், கத்ரினா கைப் ரூ.5 கோடியும் வரி செலுத்தி உள்ளனர்.
முன்னதாக, 2013-2014 நிதியாண்டில் ரூ.5 கோடிக்கு மேல் வரி செலுத்திய கத்ரீனா கைஃப், அதிக வரி செலுத்தும் பெண் நடிகை என்ற பெருமையைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க