நடிகர் தீபக் பரம்பொல் மற்றும் நடிகை அபர்ணா தாஸ் திருமணம் இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. புதுமண தம்பதியினருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


கேரளாவில் உள்ள குருவாயூர் கோயில் மிகவும் எளிய முறையில் இந்த திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து வடக்கஞ்சேரியில் திருமணத்துக்கு பிந்தைய சடங்குகள் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த முக்கியமான பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். 






முன்னதாக நேற்று முன்தினம்  அபர்ணா தாஸூக்கு திருமணத்துக்கு முந்தைய நலங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 






2018 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான அபர்ணா தாஸ், 2022 ஆம் ஆண்டு பீஸ்ட் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். கடந்தாண்டு வெளியான டாடா படம் திருப்புமுனையாக அமைந்தது. இதற்கிடையிலும் தெலுங்கில் பிரபல நடிகையாக அபர்ணா தாஸ் உள்ளார். அதேசமயம் மணமகன் தீபக் பரம்பொல் சமீபத்தில்  வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அபர்ணா தாஸூம், தீபக் பரம்போலும் மலையாளத்தில் வெளியான மனோஹரம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.அப்போது இருவருக்குள்ளும் நல்ல அறிமுகம் ஏற்பட்டது


மேலும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இருவருக்கும் திருமணம் என தகவல் வெளியாகி அழைப்பிதழ் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.