DeadPool Vs Wolverine Twitter Review 


ரையன் ரெனால்ட்ஸ் மற்றும் ஹ்யூ ஜாக்மேன் நடிப்பில் உருவாகியுள்ள, டெட்பூல் & வொல்வரின் திரைப்படம் நாளை ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.  மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸின் ஒரு அங்கமாக, நடப்பாண்டில் வெளியாகும் ஒரே திரைப்படம் இதுவாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெட்பூல் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ள, இப்படத்தில் ஹுஜ் ஜாக்மேனின் வொல்வரின் கதாபாத்திரமும் முக்கிய பங்காற்ற உள்ளது. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதோடு, நடப்பாண்டில் அதிக வசூல் ஈட்டும் படங்களில் கட்டாயம், டெட்பூல் & வொல்வரின் திரைப்படம் இடம்பெறும் என திரைத்துறையை சேர்ந்த வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இப்படியான நிலையில் டெட்பூல் & வொல்வரின் படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. விமர்சகர்களிடம் இருந்து இப்படத்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. 


சிரிப்பு சரவெடி , மிரட்டும் ஆக்‌ஷன் 


டெட்பூல் மற்றும் வுல்வரின் ஆகிய இருவரின் காம்பினேஷனில் உருவாகி இருக்கும் இப்படம் வெடித்து சிரிக்கும் நகைச்சுவைக் காட்சிகளால் நிரம்பி உள்ளதாகவும் , மறுபக்கம் அசரவைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் , தேவையான இடத்தில் எமோஷன் என ஒரு பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளதாக பெரும்பாலனவர்கள் தெரிவித்து வருகிறார்கள்






மார்வெல் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் பெரியளவில் கவனமீர்க்காத நிலையில் இப்படம் ஒரு சரியான கம்பேக் படமாக அமைந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள். பலர் இந்த படத்திற்கு 5 க்கு 4 முதல் 4.5 ஸ்டார்கள் வரை கொடுத்து வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது






ALSO READ | Raayan Review: ராவண அவதாரம் எடுக்கும் ராயன்! - எப்படி இருக்கு தனுஷின் அரைசதம்! முழு விமர்சனம் இங்கே!