அது என்ன ராசியோ தெரியவில்லை விஜய் டிவியில் பணியாற்றும் பெண் தொகுப்பாளர்கள் பலருக்கும் முதல் கல்யாணம் நினைத்தபடி அமையவில்லை. திருமணம் செய்த கொஞ்ச நாட்களிலேயே விவாகரத்து செய்து பிரிந்து விடுகின்றனர். அந்த வகையில் மிக முக்கியமானவராக இருப்பவர் திவ்யதர்ஷினி(DD). விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை, அந்த அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த திவ்யதர்ஷினிக்கு விஜய் டிவியில் தொகுப்பாளினி சான்ஸ் கிடைத்தது.
அதற்கு முன்னர் அவரது அக்கா பிரியதர்ஷினி தொகுப்பாளினியாக இருந்ததால் டிடிக்கு ஈஸியாக வாய்ப்பு கிடைத்தது. ஈசியாக வாய்ப்பு கிடைத்தாலும் தன்னுடைய தனித் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இன்றைய தேதிக்கு சின்னத்திரை வட்டாரங்களில் அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர் என்றால் அது DD தான். இவருக்கும் இவருடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் செய்த கொஞ்ச நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
அதன்பிறகு டிடி கொஞ்ச நாட்கள் அவரது முன்னாள் கணவரை பற்றி ஏதாவது ஒரு பதிவை வெளியிட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனிமையை விரும்புவதாக கூறி வந்தார். மேலும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு புகைப்படங்களை எடுத்து ரசிகர்களுக்கு பகிர்ந்து வந்தார். தற்போது டிடி பாரிஸ் நகரத்திற்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அவர். அதற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிடும்போது அந்த உணவு அவருக்கு பிடித்து இருந்ததாகவும் அந்த உணவு சமைத்து அவரை சந்தித்து அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக கூறியதாகவும் ஒரு பதிவை போட்டு கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் திவ்யதர்ஷினி (DD). இந்த செய்திதான் இன்றைய கோலிவுட் ஹாட் டாபிக்.