ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை கிரிக்கெட்டை விட்டுவிட்டு சினிமாவில் வந்து நடிக்கும் படி ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா'. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
குறிப்பாக இந்தப் படத்தில் ‘ஓ சொல்றியா பாடலுக்கு சமந்தா ஆடிய குத்தாட்டாம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தில் இடம் பெற்ற வசனங்களும் பாடல்களும் மிகப் பிரபலம் அடைந்த நிலையில், பலரும் அந்த பாடலில் நடனமாடுவது போல நடனமாடியும், வசனங்களையும் பேசியும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் புஷ்பா படத்தில், இடம் பெற்ற பாடல்களுக்கு நடனமாடியும், வசனங்களை பேசியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் புஷ்பா படத்தில் இருந்து சில காட்சிகளை எடிட் செய்து மீண்டும் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.