ஜீ தொலைக்காட்சி சேனலில் டான்ஸ் சம்பந்தமான மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சி. நடிகை, சினேகா, சங்கீதா, டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் போன்றவர்கள் நடுவர்களாக  இருந்து வரும் இந்த மூன்றாவது சீசன் ஃபைனல்ஸ் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி என்றும் மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.



அவினாஷ்


 


எதிர்பாராத விபத்து :


டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி யாராலும் அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாத ஒரு நிகழ்ச்சியாக மாறியதற்கு முக்கியமான காரணம் அவினாஷ் மற்றும் வைஷ்ணவி ஜோடி. ஃபைனல்ஸ் நடைபெறுவதற்கு முதல் நாள் இந்த போட்டியாளர்களுக்கு பலத்த அடி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு இருந்தனர். வைஷ்ணவிக்கு தலையில் காயம் ஏற்பட்டு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவர் நலமாக இருக்கிறார் என தெரிய வந்தது. ஆனால் அவினாஷிற்கு இரண்டு கால்களுக்கு முறிவு ஏற்பட்டது. பல தடங்கல்களை தாண்டி பல சுற்றுகளில் சிறப்பாக ஆடி இறுதி சுற்று வரை தகுதி பெற்ற இந்த ஜோடி பைனல் ஸ்டேஜில் நடனமாட முடியாமல் போனதே என்பதை எண்ணி மிகவும் மனம் நொந்துபோய் விட்டனர் இருவரும். டைட்டில் வின்னர் கப் பெற்றே தீர வேண்டும் என்பதை ஒரு வெறியாக கொண்டு கிட்டத்தட்ட பத்து நாட்களாக கடுமையாக பயிற்சி செய்த இந்த கூட்டணிக்கு கடைசியில் இப்படி நேர்ந்ததே என்பது அனைவருக்கும் மிகுந்த மன வருத்தத்தையும் தந்தது. 






இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா?


மருத்துவர்கள் அவினாஷ் முழுமையாக பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும் என கூறியும் இத்தனை நாட்கள் உழைப்பும் கனவும் வீணாக போய் விடக்கூடாது என்பதற்காக நான் இன்று ஒரு நாள் மட்டும் நடனமாடி கொள்கிறேன் அதற்கு பிறகு எத்தனை நாட்கள் மாதங்கள் வேண்டும் என்றாலும் ரெஸ்டில் இருக்கிறேன் என கூறி இறுதி சுற்றில் ஒரு பெரிய ரிஸ்க் எடுத்து நடனமாடலாம் என்ற முடிவிற்கு வந்தனர் அவினாஷ் மற்றும் வைஷ்ணவி ஜோடி. மருத்துவமனையில் இருந்து காலை 5 மணிக்கு திரும்பிய உடன் ப்ராக்டிஸ் செய்த தொடங்கியுள்ளார்கள். கால் முறிவு ஏற்பட்டதால் முழுமையாகவே கோரியோகிராப் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான்கே மணி நேரத்தில் இரண்டு பாடல்களுக்கு ப்ராக்டிஸ் செய்து மேடையேறியுள்ளனர் இந்த ஜோடி. 


அன்று ஸ்டேஜில் சொன்னது பலித்துவிட்டது :


அவினாஷ் கூறுகையில் என்னால் என்னுடைய பெஸ்ட் கொடுக்க முடியவில்லை என்பதில் மிகுந்த வருத்தம். அதற்கு மேல் நான் முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. என்னுடைய பழைய வீடியோக்களை எல்லாம் பார்த்தேன். செமி பைனல்ஸ் ஸ்டேஜில் நான் சொன்ன வார்த்தை இன்னும் என ஞாபகத்தில் இருக்கிறது. "இது என்னுடைய கடைசி டான்ஸ்சா இல்லை இதற்கு பிறகும் நான் டான்ஸ் ஆடுவேனா என தெரியவில்லை" என கூறியிருந்தேன். அதை வேறு ஒரு காரணத்திற்காக சொன்னேன் ஆனால் அது இப்படி நேரும் என்பது தெரியாது” என கூறியிருந்தார் அவினாஷ். 


டைட்டில் வின்னர் :


இப்படி பல தடங்கல்களை தாண்டி பல மனவேதனை, உடல் வலி என அனைத்தையும் தாண்டி இந்த ஜோடி பைனல்ஸ் மேடையில் நடனமாடி டைட்டில் வின்னராக வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது. மேலும் இந்த ஜோடிக்கு 5 லட்சம் ருபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. சோதனைகளை தாண்டியும் சாதனை படைத்த இந்த ஜோடி நிச்சயமாகவே ஒரு திறமையான ஜோடிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.