D Imman: சிவகார்த்திகேயன் பற்றி எழுப்பப்பட்ட கேள்வி.. ஒரே வரியில் பதில் சொன்ன டி.இமான்!

சமூக வலைதளங்களில் பரவும் இந்த சர்ச்சைகளுக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்கவில்லை என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு டி.இமான் பதிலளித்தார்.

Continues below advertisement

சமூக வலைதளங்களில் தன்னைப் பரவும் கருத்துகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டதற்கு இசையமைப்பாளர் டி.இமான் பதிலளித்துள்ளார்.

Continues below advertisement

இமான் அளித்த பதில்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் வைபவ் ஆகியோர் நடிக்கும் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. டி. இமான் இப்படத்துக்கு இசையமைக்கும் நிலையில், புதுமுக இயக்குநர் சவரிமுத்து இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்ற நிலையில், இமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் அவருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இடையிலான பிரச்னை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 

‘இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார்’

சமூக வலைதளங்களில் பரவும் இந்த சர்ச்சைகளுக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்கவில்லை என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு டி.இமான் பதிலளித்தார்.

“முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒன்றும் இல்லை.. இறைவன் பார்த்துக் கொள்வார். இறைவனுக்கு எது சரி, எது தவறு என்பது மனிதர்கள் தாண்டி தெரியும். எனவே இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார் என நம்புகிறேன்” என இமான் பதிலளித்தார் .

நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தின் தொடக்கம் முதலே அவரது படங்களுக்கு இசையமைத்து அவருக்கு நெருக்கமானவர்களுள் ஒருவராக வலம் வந்தவர் இசையமைப்பாளர் இமான். 
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த இமான், சிவகார்த்திகேயன் உடன் பிர்னை என்றும் இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து பயணிக்க மாட்டேன் என்றும் திடீரெனப் பேசியிருந்தார்.

சிவகார்த்திகேயன் Vs இமான்

கோலிவுட் வட்டாரத்தில் இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பி பேசுபொருளானது. மேலும்,  “இதுக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கு. சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகத்தை வெளியில் சொல்ல முடியாது. வரும் காலத்துல அவர்கூட சேர்ந்து பயணிக்க முடியாது. அடுத்த ஜென்மத்துலயும் நான் இசையமைப்பாளரா இருந்து அவர் நடிகராவும் இருந்தா அது நடக்கலாம்.

நான் யார்னு எனக்குத் தெரியும். என்னை படைத்தவர் யார்னு தெரியும். இறைவனுக்கும் எனக்கும் நான் வாழ்ற வாழ்க்கை, சமூகம், குடும்பத்துக்கும் சரியா இருக்கேனா, அறம்  சார்ந்து வாழ்க்கை வாழ்கிறேனா என்பதே எனக்கு முக்கியம்.

‘யோசிச்சு எடுத்த முடிவு'

சில விஷயங்கள் வேண்டாம்னு முடிவு செய்கிறோம். ரொம்ப யோசிச்சு எடுத்த முடிவு இது. நான் இத மெதுவாக தான் உணர்ந்தேன். சில விஷயங்கள மூடி மறைக்கிறேன் என்றால், அதற்கு குழந்தைகளின் எதிர்காலம் தான் காரணம்” எனப் பேசியிருந்தார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் காரசாரமாக இன்று வரை விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இமான் இவ்விவகாரம் குறித்து மீண்டும் இவ்வாறு பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola