இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்திருக்கும் படம் கஸ்டடி. இந்தப் படம் நாளைத் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்குள்ளாக புதிய சர்ச்சை ஒன்றை கிளம்பிவிட்டிருக்கிறார் நெட்டிசன் ஒருவர். இதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார் படத்தின் இயக்குனர் நம்ம வெங்கட் பிரபு.


கஸ்டடி:


வெங்கட் பிரபு நாக சைதன்யாவை இயக்கியிருக்கும் படம் கஸ்டடி. அண்மையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருந்தது. கஸ்டடி திரைப்படம் வெங்கட் பிரபுவின் வழக்கமான ஸ்டைலில் இல்லாமல் புதிய ஒரு முயற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் பெரிதாக காமெடி காட்சிகள் எதுவும் இல்லாமல் முழு ஆக்‌ஷன் படமாக கஸ்டடி இருக்கலாம்  என்கிற எதிர்பார்ப்பை  ட்ரெய்லர் உருவாக்கியிருக்கிறது. கஸ்டடி திரைப்படம் நாளை ரீலிஸாக இருப்பதால் படத்தின் புரோமோஷன் வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி:


நேற்று முன்தினம் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கட் பிரபு கஸ்டடி படத்திற்கான உந்துதல் தனக்கு எந்த படத்திலிருந்து வந்தது என பகிர்ந்துகொண்டார். கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான நயட்டு படம்தான் கஸ்டடி பத்தை எடுப்பதற்கு தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது என அவர் தெரிவித்தார். அதே மாதிரியான ஒரு படத்தை எடுக்க வேண்டும் எனவும் ஆனால் அதை மக்கள் அனைவரும் ரசிக்கும் வகையில் எடுக்க நினைத்துதான தான் கஸ்டடி படத்தின் கதையை எழுதியதாக தெரிவித்தார் வெங்கட் பிரபு.90 களில் நடக்கும் கதையை மையமாக கொண்டதால் அந்த ஃபீலைக் கொண்டுவர இளையராஜாவை இசையமைக்க கேட்டுகொண்டதாக கூறினார் வெங்கட் பிரபு.


இந்த நிகழ்வைத் தொடர்ந்து ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் நயட்டு படத்தின் ரீமேக் தான் கஸ்டடி என்று வதந்தி ஒன்றை பரப்பிவிட்டுள்ளார்.இதை கவணித்த வெங்கட் பிரபு அந்த நபருக்கு ரீட்வீட் செய்துள்ளார்.கஸ்டடை நயட்டு படத்தின் ரீமேக் இல்லையெனவும் நாளை படம் வெளியானப் பின நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்வீர்கள் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.


தனித்துவமான இயக்குனர்:


சென்னை 28 படத்தின் வழியாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் வெங்கட் பிரபு.தமிழ் சினிமாவில் அதுவரை வந்த கிரிக்கெட் பற்றிய திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வேறிபட்ட படமாக இந்தப் படம் இருந்தது.அன்று தொடங்கி இன்று வரை தமிழ் சினிமாவில் தனக்கென தனியான ஒரு இடத்தை தக்கவைத்து வருகிறார் வெஙட்பிரபு.


கோவா,மங்காதா,சரோஜா ஆகியவை அவரால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய திரைப்படங்கள்.தற்போது தெலுங்கு சினிமாவில் தனது முதல் படமாக கஸ்டடி படத்தை இயக்கியுள்ளார் வெங்கட்பிரபு. இந்த படத்தின் வழியாக தனக்கென புதிட அடையாளம் ஒன்றை அவர் தெலுங்கு ரசிகர்களிடம் உருவாக்குவார் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.