லப்பர் பந்து


அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லப்பர் பந்து. ஹ்ரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் , காலி வெங்கட் , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , பால சரவணன் , கீதா கைலாசம் ஜென்சன் திவாகர் , ஸ்வசிகா விஜயகுமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம் திரைத்துறையினர் மற்றும் ரசிகரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இக்கதையில் சாதிய சமத்துவம் , குடும்ப உறவுகள்  என பல்வேறு விதமான உணர்வுகளை திரைக்கதை நேர்த்தியுடன் கையாண்டிருக்கிறார் இயக்குநர்.


லப்பர் பந்து படத்தின் முழு விமர்சனத்தை படிக்க : Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!


லப்பர் பந்து படக்குழுவினரை பாராட்டிய அஸ்வின் 


இயக்குநர் வெற்றிமாறன் , ரஞ்சித் , நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் இப்படத்தை பாராட்டி வரும் நிலையில் தற்போது இந்திய அணி கிரிக்கெட் வீரர் அஸ்வின் லப்பர் பந்து படத்தை பார்த்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார் " ஒரு திரைப்படத்தை இயக்குவது என்பது மிக சவாலான காரியம் அதன் காரணத்தினால் நான் பெரும்பாலும் ஒரு படத்தில் இருக்கும் நெகட்டிவான அம்சங்களை விட்டு அதன் பாசிட்டிவான அம்சங்களை பற்றி மட்டுமே பேசுவேன். ஆனால் இன்று இந்த படத்தைப் பற்றி பேசாமல் என்னால் இருக்க முடியாது.  பல வருடங்களுக்குப் பிறகு விளையாட்டை மையப்படுத்திய ஒரு திரைப்படத்தை ரொம்பவே ரசித்தேன். வழக்கமாக ஸ்போர்ட்ஸ் படங்களில் இருக்கும் சம்பிரதாயமான காட்சிகள் இல்லாமல் எப்படி உண்மைக்கு மிகவும் நெருக்கமான ஒரு படத்தை எடுக்க முடியும் என்பதை காட்டியிருக்கிறது  ‘லப்பர் பந்து’ திரைப்படம். பொதுவாக தமிழில் வரும் கிரிக்கெட் படங்களில், மையக்கதையில் இருந்து  விலகி அவர்கள் என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்லிவிட்டு செல்வார்கள். அந்த வகையில் தனித்துவமான இப்படம் எனக்கு  ரொம்பவும் ஸ்பெஷலாக இருந்தது.






இயக்குநருக்கும் படக்குழுவுக்கும் என்னுடைய  வாழ்த்துகள்.” என கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்