வெள்ளை சர்க்கரையில் எந்த ஊட்டச்சத்தும் இல்லை என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இனிப்பாக இருந்தாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துகொள்வது உடல்நலனுக்கு தீங்கானது என்பது நாம் அறிந்ததே.அப்படி, சர்க்கரை சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பது பற்றி நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம்.


பழங்களில் இருந்து ஜூஸ் செய்யும்போது அதில் சர்க்கரை சேர்ப்பது, பாட்டில்களில் விற்கப்படும் டிரிங்க் வகைகள் என எதுவாக இருந்தாலும் அது உடல்நலனுக்கு நல்லதல்ல என்கிறனர் நிபுணர்கள். Soft Drinks என்று சொல்லப்படும் குளிர்பானங்களில் அதிகளவு சர்க்கரை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். ஒரு பாட்டில் டிரிங்கில் உடலுக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான சர்க்கரை இருப்பதால சொல்லப்படுகிறது.






சர்க்கரையில் உள்ள 'fructose’ என்பது குளிர்பானங்களில் அதிகளவு இருக்கிறது. இதில் நார்ச்சத்து உள்ளிட்ட எதுவும் இல்லை என்பதால் அதிகளவில் குடிக்க நேரிடும். எவ்வளவு கலோரி குடித்தோம் என்பது கூட தெரியாது. இதுவே பழங்கள் என்றால், அவற்றில் நார்ச்சத்து, ஆண்டி-ஆக்ஸ்டண்ட் உள்ளிட்டவை இருக்கிறது. இதனால் உடலுக்கும் நல்லது. உங்களுக்கு சாப்பிட்ட உணர்வையும் தரும். பாட்டில் பாட்டிலாக குளிர்பானம் குடிப்பது போல ஒரு டப்பா நிறைய பழங்களை அளவில்லாமல் சாப்பிட்டுவிட முடியாது. மாம்பழம் உள்ளிட்ட இனிப்பு அதிகம் இருக்கும் பழங்களை மட்டுமே அளவோடு சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.


அதேபோல் காலையில் உணவோடு சர்க்கரை சேர்த்த ஜூஸ் குடிப்பது நல்லதல்ல. உங்கள் உடலின் தேவைக்கு ஏற்ப டய்ட் திட்டமிடவும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது உடல்நலனுக்கு கேடானது.


குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கத்தை குறைத்துகொள்வது நல்லது. அதுவும் பீட்ஸா, பர்கர், பிரியாணி என உணவு சாப்பிட்ட பிறகு, குளிர்பாங்கள், சோடா குடிப்பது ஆரோக்கியமானது இல்லை என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஸ்சாஃப் டிரிங்க்ஸ் குடிப்பதை பழக்கப்படுத்தலாம். குழந்தைகளுக்கு பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் டிரிங்ஸ் வகைகளை கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.