கூலி ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த்
கூலி ஆடியோ லாஞ்சில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் "இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை சொல்ல வந்து நான் கமல் ரசிகன் என்றார். கதையை சொல்ல சொன்னால் கமல் ரசிகன் என்கிறாரே என நினைத்தேன். முதலில் ஒரு கதை சொன்னார். அந்த கதையில் உட்கார்ந்து கொண்டு அடிக்கலாம் படுத்துக் கொண்டே அடிக்கலாம். பின் ஒரு மாதம் கழித்து வந்து அந்த கதையில் நிறைய ஆர்டிஸ்ட் வேற கதை சொலவ்தாக சொன்னார். ஏதோ இந்த படத்தில் மட்டும் கொஞ்ச நடிகர்கள் மாதிரி. முதலில் இந்த படத்திற்கு தேவா என்று டைட்டில் வைத்திருந்தோம். லோகேஷிடம் மற்ற படங்கள் பான் இந்தியா ஹிட் ஆகுது இந்த படத்தை பான் இந்தியா அளவில் எடுங்கள் என்று சொன்னேன். ரிலீஸ் தேதியை நீங்களே முடிவு செய்யுங்கள் என்றேன். லோகேஷ் கனகராஜ் 2 மணி நேரத்திற்கு கொடுத்த பேட்டியை உட்கார்ந்து பார்த்தேன் முடியல , படுத்து பார்த்தேன் முடியல தூங்கி எழுந்து பார்த்தேன் அப்போதும் முடியல. லோகேஷ் தான் உண்மையான ஹீரோ. அனிருத் தான் இந்தியாவின் முதல் ராக்ஸ்டார் ' என கலகலப்பாக பேசினார்
நடிகர் சத்யராஜ் குறித்து பேசுகையில் " எனக்கும் சத்யராஜூக்கும் கருத்து ரீதியான முரன்பாடு இருக்கலாம். ஆனால் அவர் தன் மனதில் பட்டதை பேசிவிடுவார். மனதில் பட்டதை பேசுபவர்களை நம்பலால் ஆனால் உள்ளே வைத்துக் கொண்டிருப்பவர்களை நம்ப முடியாது' என்று ரஜினி பேசினார்
நடிகர் நாகர்ஜூனாவின் கதாபாத்திரத்தை பற்றி பேசியபோது " வெங்கட் பிரபு அஜித்துக்கு ஒரு வசனம் எழுதியிருப்பார் ' நானும் எத்தன நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது' என்று அந்த மாதிரியா ஒரு கதாபாத்திரத்தில் நாகர்ஜூனா நடித்துள்ளார். " என ரஜினி கூறினார்
தான் பஸ் கண்டக்டராக இருந்த காலத்தைப் பற்றி பேசியபோது " நான் பஸ் கண்டக்டராக வேலை செய்தபோது என் நண்பன் தான் தன்னுடைய செயினை கொடுத்து என்னை சென்னை போக சொன்னான். அவனால் தான் இன்று நான் இங்கே இருக்கிறேன். எவ்வளவு பணம் இருந்தாலு நிம்மதி இல்லையென்றால் எல்லாம் வேஸ்ட்" என்றார்
இந்த படத்தில் நடன காட்சிகளில் ஆடுவதற்கு முன்பு ' நான் 1950 மாடல் . லட்சம் கிலோ மீட்ட ஓடியிருக்கிறேன். உடலில் பல பாகங்களை மாற்றியிருக்கிறார்கள். அதனால் என்னை பார்த்து ஆட வையுங்கள் என நடன இயக்குநரிடம் சொன்னேன்" என ரஜினி பேசினார்
கூலி டிரெய்லர்
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் நடித்த நாகர்ஜூனா , ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ் , ஆமிர் கான் ,செளபின் சாஹிர் சார்லீ உள்ளிட்ட அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அனிருத் இசையில் மொத்தம் 8 பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. இத்துடன் கூலி படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகமெங்கிலும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது கூலி.