மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வித் திறன்கள் மற்றும் அடிப்படை திறன்கள் உள்ளது.

Continues below advertisement

SLAS 2025

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறன்களை மதிப்பீடு செய்யும் State Level Achievement Survey 2025 (SLAS 2025) இல், மதுரை மாவட்டம் மாநில அளவில் மூன்றாவது இடத்தை பெருமையாகப் பெற்றுள்ளது. இத்தேர்வில் வகுப்பு 3, 5 மற்றும் 8 மாணவர்களின் படிப்புத் திறன் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

Continues below advertisement

கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கம்

மாநிலத்தின் சராசரி மதிப்பெண்களைவிட, மதுரை மாவட்டம் அனைத்து தரப்புகளிலும் மேலாக செயல்பட்டு, தொடர்ந்து மாநிலத்தின் முன்னணி இடங்களில் திகழ்கிறது. 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தொடர்பான கல்வித் திறன்கள் மதுரை மாவட்டத்தில் சற்று குறைவாகவே பதிவாகியுள்ளன. இதனால் மதுரை மாநகராட்சி மாண்புமிகு மேயர், ஆணையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மதுரை மாநகராட்சி பள்ளிகள்

இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து 4 நடுநிலைப் பள்ளிகள், 2 உயர்நிலைப்பள்ளிகள், 4 மேல்நிலைப் பள்ளிகள் மொத்தம் 10 பள்ளிகளில் SLAS மதிப்பீடு மற்றும் திறன் (THIRAN) திட்டத்தின் அடிப்படைத் திறனாய்வு (Baseline Survey) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. மேற்கண்ட 10 பள்ளிகளை மதுரை மாநகராட்சியின் 10 முதன்மை அலுவலர்கள் பார்வையிடுவதற்கும் வழிகாட்டுவதற்கும் பொறுப்பேற்க உள்ளனர்கள்.

திறன்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில், மாணவர்களின் அடிப்படை வாசிப்பு, எழுதும் திறன்கள் மற்றும் FLN (Foundational Literacy and Numeracy) மட்டுமல்லாமல், விரிவான வாசிப்பு மற்றும் புரிதல் திறன்கள் (Comprehensive Reading and Understanding Skills) மேம்படக்கூடிய வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர் அவர்களால் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவியர்களுக்கு வாசிப்பு, எழுத்து மற்றும் எண்ணத் திறன்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்க உள்ளனர்.

சிறப்பு வகுப்புகள் நடத்த உள்ளனர்

மேலும் துணை ஆணையர், நகர்நலஅலுவலர் உள்ளிட்ட 10 முதன்மை அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளை தினமும் நேரில் பார்வையிட்டு வகுப்பு 6 முதல் 9 வரை உள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வித் திறன்கள் மற்றும் அடிப்படை திறன்கள் மேம்படக் கூடிய வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்த உள்ளனர்.