'தி லெஜண்ட்' திரைப்படத்திற்கு கூல் சுரேஷ் கொடுத்த விமர்சனத்தை இங்கு பார்க்கலாம். 


இன்று பிரபல ஜவுளிக்கடை அதிபரான  சரவணன் அருள் நடிப்பில் உருவான  ‘தி லெஜண்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. வழக்கமாக படம் தொடர்பான மக்கள் கருத்தை கேட்க வத வத வென வந்து நின்றார்கள் யூடியூப்பர்கள்.. அவர்கள் முன் சாமி போல வந்து நின்றார் கூல் சுரேஷ். முன்னதாக இவர் படம் பார்த்து கொடுத்த வித்தியாசமான ரிவியூக்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்ற நிலையில், அதே பாணியிலேயே  ‘தி லெஜண்ட்’ படத்திற்கான ரிவியூவை கொடுத்தார். 


கூல் சுரேஷ் கொடுத்த ரிவியூ இதோ


சுரேஷ் கூறும் போது, “ படம் பார்த்தேன் ஒரே போரு.. என் நண்பனிடம் அப்பவே சொன்னேன். இந்தப்படம் வேண்டாம் என்று.. அண்ணாச்சி நீங்க துணிக்கடையிலேயே 4 பேர வாழ வைங்க எதுக்கு படமெல்லாம் எடுக்க வர்றீங்க.. என்று கூல் சுரேஷ் பேச.. வந்த யூடியூப்பர்களெல்லாம் ‘எந்திரன்’ படத்தில் ரஜினி காளியாக மாறி.. பின்னர் ஆயுதங்களை கீழே விட்டு நிற்பதை பார்த்த ஆண்டிஸ் போல ‘என்னாடி இது’ என்பது போல பார்த்தார்கள்..





அப்போதுதான்  ‘உங்க அப்பன் மவனே’ என்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சடாரென்று ப்ளேட்டை மாற்றிய கூல் சுரேஷ்.. இப்படியெல்லாம் பேசுவீங்கன்னுதானே எதிர்பார்த்தீங்க என்று பழைய ஃபார்மிற்கு வந்தார். 


 “வெந்து தணிந்தது காடு அண்ணாச்சிக்கு வணக்கத்த போடு” என்று தனது வழக்கமான பாணியில் வணக்கத்தை போட்ட கூல் சுரேஷ், “ படம் சூப்பரா இருக்கு.. இந்தப்படத்துக்கு ஹீரோ ஜிம்னாஸ்டிக் கத்துருப்பாரு போல.. ஆக்‌ஷன் கிங், கேப்டன் விஜயகாந்திற்கெல்லாம் டஃப் கொடுத்து இருக்காரு.. உண்மையிலேயே பேன் இந்தி படத்திற்கு ஒர்த்தான படம்பா..




ஹீரோ சும்மா வெள்ளிச்சிலை மாதிரி தகதகன்னு மின்னுராருப்பா.. பித்தளை செம்பை புளியை போட்டு தேய்ச்ச மாதிரி சும்மா பளபளன்னு இருக்காருப்பா.. தமிழ்நாட்டுல இனி ஒரு சூப்பர்ஸ்டார் இல்ல இரண்டு சூப்பர் ஸ்டார்.. ஒரு தளபதி இல்ல இரண்டு தளபதி..” என்று தனது ஸ்டைலிலேயே ரிவியூவை கொடுக்க, அப்பாடி நாம எதிர்பார்த்து வந்தது  கிடைத்துவிட்டது என்பது  ‘சாமி நல்லா இருக்கணும்’ என்று வந்த வழி பார்த்து சென்றனர் யூடியூப்பர்கள். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண